Home பாலியல் பெண்களின் அந்த குறைபாடுகளுக்கான காரணங்கள்

பெண்களின் அந்த குறைபாடுகளுக்கான காரணங்கள்

43

Couple getting intimate in bedroom
Couple getting intimate in bedroom
தாம்பத்தியத்தில் சில பெண்களுக்கு அதிகளவில் நாட்டம் இருக்காது. அதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும் சில வெளியில் சொல்ல முடியாத காரணங்களும் இருக்கதான் செய்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.

1. உடலுறவின் போது வலி
2. பிறப்புறுப்பு தானாகவே சுருங்குவதால் உடலுறவு முடியாமல் போதல். அடிப்படை பயத்தால், பெண்ணின் பிறப்புறுப்பு “மூடியது” போல் சுருங்கி விடும்.
3. பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல்
4. உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.

பெண் குறைபாடுகளுக்கு மனோ ரீதியான காரணங்கள்

1. அறியாமை, உடலுறவு என்றாலே ஒரு ‘கெட்ட’ விஷயம் என்ற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்
2. பரபரப்பு, மனச்சோர்வு
3. கணவரை பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு
4. குழந்தை உண்டாகி விடுமோ என்ற பயம்
5. டீன் ஏஜ் பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்கள் / தெரியாதவர்கள். உறவினர்களால் தெரியாதவர்களால் கற்பழிக்கப்படுவது.

ஆயுர்வேத சிகிச்சை மருந்துகள்

ஆயுர்வேத சிகிச்சைகள், பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கும், குறிப்பாக மனக்கோளாறுகளுக்கும் முழுமையான பயனை அளிக்கும். பஞ்சகர்மா, ரசாயனம், வாஜீகர்ணம் முதலிய சிகிச்சைகள் அளிக்கப்படும். பிறகு திரிதோஷக் கோளாறுகள் சீராக்கப்படும். இதில் சத்துணவு, யோகா, மூலிகைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் அடங்கும். இவ்வாறு வியாதியின் அடிப்படை காரணம் களையப்படும். சதவாரி, சங்கு புஷ்பம், அஸ்வகந்தா, குடூச்சி, ஜடமான்சி போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத வைத்தியரை அணுகி, பயனடையவும்.

யோகாவும் செக்ஸ் குறைபாடுகளும்

பலருக்கு யோகாவும் யோகாசனங்களும் ஆன்மீக தேவை உள்ள சந்நியாசிகள் போன்றவர்களுக்கே ஏற்றவை என்ற அபிப்பிராயம் உள்ளது. யோகா பாலயல உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்கிறது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும். யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். டென்ஷன், ஸ்ட்ரெஸ் குறையும். செக்ஸ் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.