Home பெண்கள் அழகு குறிப்பு புருவ அழகுக்கு எளிய குறிப்புகள்

புருவ அழகுக்கு எளிய குறிப்புகள்

11

788a346f-ffd1-4566-a1f1-562a51b074b6_S_secvpfவெந்தயம்

வெந்தயத்தை நன்கு அரைத்து, அதனை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு, மறுநாள் காலையில் எழுந்து கழுவி விட வேண்டும். வேண்டுமென்றால் இதனுடன் சிறிது பாதாம் எண்ணெயையும் சேர்த்து செய்யலாம். இதனால் புருவம் நன்கு எண்ணெய் பசையோடு, சற்று அடர்த்தியாக இருப்பது போல் தோன்றும்.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு, வேகமாக வளரச் செய்யும். ஆகவே வெங்காயச் சாற்றை காட்டனில் நனைத்து தடவிக் கொள்ள வேண்டும்.முக்கியமாக இதனை தடவியதும் கழுவி விடக் கூடாது. கழுவாமல் இருந்தால் தான், இதன் முழு பயனை அடைய முடியும்.

கற்றாழை

புருவம் மிகவும் மெல்லியதாக இருந்தால், அப்போது கற்றாழையின் ஜெல்லை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், புருவத்தில் கூந்தல் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

ஆமணக்கெண்ணெய்

ஆமணக்கெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமான அளவு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அதிலும் கூந்தல் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த எண்ணெய்.

இந்த எண்ணெயை புருவத்தில் தடவி, இரண்டு அல்லது மூன்று நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் அரை மணி நேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில், கிளின்சரைப் பயன்படுத்தி கழுவிட வேண்டும். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், புருவம் நன்கு வளரும்.