Home உறவு-காதல் புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்…

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்…

29

2887445புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போடுறேன் (அப்பாவி ஆண்கள்லாம் என்னை மன்னிச்சுடுங்க..)

1. கல்யாணம் நிச்சயமான புதுசுல பர்த்டே, லவ்வர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவீங்க. ஆனால், கல்யாணம் ஆகிட்டாலோ எங்க பர்த்டே கூட மறந்து போகுதே! நிஜமாவே எங்களைத்தான் பார்க்க வருவீங்களா? இல்லை மச்சினிச்சியை பார்க்க வந்தீங்களா?

2. மீட்டர் 25 ரூபாய்க்கு மேல துணி எடுத்து சட்டை போடாத கஞ்சூஸ் நீங்க, மாமனார் துணி எடுக்கும்போது மட்டும் பார்க் அவென்யூ சர்ட்டும், ரேமாண்ட் ஃபேண்டும் தவிர வேறேதும் போடாத மாதிரி சீன் போடுறிங்களே எப்படி?

3.உங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு லீவ் கிடைக்குது. ஆனால், எங்க வீட்டு விசேசத்தன்னிக்கு மட்டும் ஆடிட்டர் வந்துடுறார், இண்டெர்வியூ, மீட்டிங்க் ஏதாவது வந்துதுடுதே அதெப்படிங்க?

4. உங்க வீட்டு விசேசத்துல வாசல்ல வாழைமரம் கட்டுறது முதற்கொண்டு , மிச்சம் மீதி மளிகை சாமான் வண்டில ஏத்தி வீட்டுக்கு கொண்டு வந்து இறக்கும் வரை மாடா வேலை செய்யும் நீங்கள், எங்க வீட்டு விசேசங்களில் மட்டும் டீக்கா டிரெஸ் பண்ணிக்கிட்டு கால் மேல் கால் போட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டு மாப்பிள்ளை முறுக்கு காட்டுறீங்களே அது எப்படிங்க?

5. உங்க வீட்டு விசேசங்களுக்கு சீர் செய்ய மட்டும் லோன் போடாம, சீட்டு பணத்தை உடைக்காம 25,000 கூட பணம் வருது. ஆனால், எங்க வீட்டு விசேசத்துக்கு சீர் செய்யறதுக்கு மட்டும், இன்கம் டாக்ஸ், மன்த் எண்ட் வந்து 1001க்கு மேல செய்ய முடியாம போய்டுதே எப்படிங்க ?

6. உங்க அக்கா பிள்ளைங்க, தம்பி பிள்ளைங்க கோடை விடுமுறைக்கு வந்து டி.வி, வாசிங்க் மெசின், ஏசிலாம் ரிப்பேர் செஞ்சு 1000, 2000ன்னு தண்டம் அழுதாலும் குழந்தைங்கன்னா அப்படிதான்மான்னு சொல்லிட்டு, எங்க அக்கா பிள்ளையோ, அண்ணன் பிள்ளையோ வந்து ஒரு 10ரூபாய் பொம்மையை உடைச்சுட்டால்கூட வானரப்படைகள்ன்னு திட்டுறிங்களே எப்படிங்க?

7. கம்மல் வாங்கி தாங்க, செயின் வாங்கி தாங்கன்னு கேட்டால் மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதிக்கும் நீங்க வீடு கட்ட, வண்டி வாங்கும்போது பணம் பத்தலை உன் செயினை தாயேன் கொலுசை தாயேன்னு ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல வந்து நிக்குறிங்களே எப்படி?

8. புடவை எடுக்கும்போது 500 ரூபாய்க்கு மேல புடவை எடுத்தால் முகத்தை தூக்கி எரவானத்துல வச்சுக்கிட்டு, எங்காவது கிளம்பும்போது எங்க ஆபீஸ் மேனேஜர் வீட்டு விசேசம் இப்படியா சாயம் போன சேலை கட்டிக்கிட்டு வருவே…,ன்னு வழியெல்லாம் திட்டிக்கிட்டே வருவீங்களே. காஸ்ட்லியா புடவை எடுத்துக்குடுக்காத உங்களுக்கு வெட்டி பந்தா மட்டும் ஏங்க?

9. ஒருமணி நேரம் புடவை கட்டி, மேக்கப் போட்டு உங்களோடு வந்தாலும் அழகா இருக்கு, உன் நிறத்துக்கு எடுப்பா இருக்குன்னு சொல்லாத நீங்க பார்த்த பத்து செகண்டுக்குள் இந்த புடவை உங்களுக்காகவே தயாரிச்ச மாதிரி இருக்குங்க. இந்த மயில் டிசைன் அழகுன்னு டைப்பிஸ்ட்டுக்கிட்ட ஜொள்ளு வழிய வழிய சொல்றிங்களே எப்படிங்க?

10. உங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால், லீவ் போட்டு ஊரை சுத்தி காட்டி, ஊரு கதை, உலகத்து கதைலாம் பேசறீங்க. ஆனால், எங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால் மட்டும் ஆபீசுல மீட்டிங்க், எம்டி வந்துட்டான்ன்னு சொல்லி ராப்பிச்சைக்க்காரன்கூட தூங்கினப்பின் வர்றீங்களே அதெப்படிங்க?

11.உங்களுக்கு சின்னதா தலைவலி வந்தால்கூடா ஆ, ஊன்னு கத்தி ஊரையே கூட்டி, பொழுதன்னிக்கும் படுத்து ரெஸ்ட் எடுக்கும் நீங்க…, எங்களுக்கு உடம்பு முடியாதப்ப ஃப்ரெண்ட்சை கூட்டி வந்து ஒரு சாம்பார், ரசம், ஒரு பொறியல், அப்பளம் மட்டும் செஞ்சுடேன். வேற எதும் வேணாம்ன்னு உங்களால் மட்டும் சொல்ல முடியுதே எப்படிங்க.

12. நீங்க ரெண்டு வீட்டுக்கு முன்னாடி வரும்போதே உங்க தொப்பை நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குறதை மறந்து.., எங்க ஆபீஸ் ஸ்டெனோ ஸ்லிம்மா சூப்பரா இருக்கா. நீயும் இருக்கியேன்னு பூசுனாப்புல குஷ்பூ போல இருக்கும் எங்களை கிண்டல் பண்றீங்களே எப்படி?

13. நண்பன் ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான் அதுக்கு பார்ட்டின்னு சொல்லி ராத்திரி முச்சூடும் பார்லயே பழியா கிடந்துட்டு, கடைத்தெருவுல காலேஜ் மேட்டை பார்த்து ஹாய் பார்த்து ரொம்ப நாளாச்சுடின்னு சொல்லும் தோழிக்கிட்ட பேசக்கூட விடாம பஸ் போய்டும், கிரிக்கெட் மேட்ச் இருக்குன்னு சொல்றிங்களே எப்படிங்க.

14. பொழுது போகாம சீரியல் பார்க்குற எங்களை குறைச் சொல்லி, ரிமோட்டை பிடுங்கி ஒரு நியூஸ் சேனல் விடாம பார்த்துட்டு, அப்பா இப்போ தமிழக கவர்னர் யார்ப்பா?ன்னு குழந்தை கேட்கும் கேள்விக்கு ரோசையாவோ? சுர்ஜித் பர்னாலாவோன்னு நினைக்குறேன். எதுக்கும் அம்மாவை கேட்டுக்கோன்னு சொல்றீங்களே, நிஜமாவே நியூஸ்தான் பார்த்தீங்களா? இல்லை நியூஸ் வாசிக்குற லேடீசை பார்த்திங்களா?

15. பொழுதன்னிக்கும் ட்விட்டர், விடியோ சாட், ஆடியோ சாட், ஃபேஸ்புக், பிளாக், பஸ்ன்னு நெட்டுல சுத்திக்கிட்டு…, ஸ்கூல்ல போய் அஞ்சாவது ஏ செக்‌ஷன்ல படிக்குற குமாரை பார்க்கனும் சொல்ல பியூன் கூட்டி வரும் பையனை பார்த்து இது என் பையனில்லையேன்னு விழிக்க.. சார் உங்க பையன் பேரு சுகுமார்ன்னு அந்த வழியா வரும் கிளாஸ் டீச்சர் சொல்ற லட்சணத்துல குடும்பம் நடத்திட்டு. பொண்டாட்டிகள்கிட்ட புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு ஒரு பதிவை மனசாட்சி இல்லாம போட்டீங்களே எப்படிங்க?