Home பாலியல் புகைப் பிடிக்கும் பெண்களின் உடலியல் மாற்றங்கள்

புகைப் பிடிக்கும் பெண்களின் உடலியல் மாற்றங்கள்

13

chennai-smokeing-girl-392x375சிகரெட் பழக்கம், ஆண், பெண் என்று பிரித்து பார்க்காமல் எல்லோருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

1. புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.

2. புகைப்பழக்கம் பல்லோப்பியன்(Fallopian Tube ) குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

3. புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.

4. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் (menopause ) சீக்கிரமே துவங்கி விடும்.

5. பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.

6. பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ (second hand smoke) மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.