Home பாலியல் பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?

21

download (3)பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.

பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.
ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்.