Home பாலியல் பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படும் பெண்ணின் மனநிலை

பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படும் பெண்ணின் மனநிலை

17

bfcda5f8-ab4f-4708-83ef-3689096b7bfa_S_secvpfபெண் உடல் என்றால் சித்திரவதைக்கானது. ஆணுடலில் வலு இருந்துவிட்டால் போதும். பெண் உடலின் மீதான உரிமையை சந்தர்ப்பம் பார்த்தோ அல்லது வலுவான சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டோ அத்துமீறி எடுத்துக்கொள்ளலாம்.

பதினெட்டு வயது நிரம்பாத சிறுவனாக இருந்தாலும் அவனும் இத்தகைய சதை மிருகம்தான். கேட்டால் பெண்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று பொன்மொழிகளை இலவசமாக அருளுவார்கள். பெண் உடல்தான் எங்களுக்குப் பிரச்சினை. ஒரு போர்வையால் மூடிக்கொண்டிருந்தால் ஏன் நாங்கள் இதையெல்லாம் செய்யப் போகிறோம் என்பார்கள்.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படும் பெண்ணின் மனநிலை குறித்தும், பெண்களைப் பொறுத்தவரை இது எவ்வளவு உணர்வுபூர்வமானது என்பதுவும் குறித்தும் இங்கு எவருக்கும் அக்கறையில்லை. பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்படுவது அவள் உடலின் மீது மட்டும்தான் என்பதே அவர்களின் புரிதலாகவும் இருக்கிறது. எப்போதுமே பெண் என்பவள் உடல் என்பதைத் தாண்டி வேறு ஒன்றாகப் பார்க்கப்படுவதில்லை என்பதுதான் பெண்கள் பற்றிக் கருத்து சொல்லும் ஒவ்வொருவரின் சொற்கள் மூலமாகவும் வெளிப்படுகிறது.

இந்தியாவெங்கும் 25,000 பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் சீண்டல்கள் குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. போலீஸ், கோர்ட் என்று வெளியில் வந்தவை இவை. ஆனால், மான, அவமானங்களுக்கு ஆட்பட்டு வெளியில் சொல்லாமல் மறைத்தவை இதில் எவ்வளவோ உள்ளன.