Home பாலியல் பரவச நிலையை அடைய நீங்கள் செய்ய வேண்டியவைகள்!!!

பரவச நிலையை அடைய நீங்கள் செய்ய வேண்டியவைகள்!!!

12

download (2)ஒரு முறை மட்டும் உடலுறவுக் கொள்ளாது அடுத்தடுத்து உடலுறவில் ஈடுப்படுவது நீங்கள் உடலுறவில் உச்சம் அடைய உதவும். பெண்களின் உடல் வலிமையை பொறுத்து, இதில் ஈடுப்படுவது அவசியம். பெண்களின் உடல் வலிமை குறைவாக இருக்கும் போது இதை தவிர்த்துவிடுங்கள்.
உடலுறவில் ஓர் ஆணும், பெண்ணும் உடல் ரீதியாக இணைவதில் மட்டுமே முழுவதுமாக இன்பம் கண்டிட இயலாது. ஒரு சில வார்த்தை ஜாலங்களிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட வேண்டும். இது தான் பெரும்பாலும் நீங்கள் உச்சம் அடைய உதவும். ஆண்களுக்கு விறைப்புத்தன்மையும், ஆண்மையும் சீரான அளவில் இருக்க, அவர்களது இடுப்பு பகுதியின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது ஆகும். இது ஆண்களது புரோஸ்டேட் சுரப்பியை தூண்டிவிட உதவுகிறது. பெண்களுக்கு கருப்பையின் வலிமை முக்கியமானது ஆகும்.
சுவாச பயிற்சி மிகவும் முக்கியமானது. சுவாச பயிற்சி உங்களது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த உதவுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீரடையும். இரத்த ஓட்டம் சீரடைவதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும்.
ஒரே மாதிரி உடலுறவு கொள்வதை தவிர்த்து, வேறு சில முறைகளை கையாள்வதன் மூலம் உடலுறவில் உச்சம் அடைய முடியும்