Home பெண்கள் அழகு குறிப்பு பப்பாளி பேஷியல்

பப்பாளி பேஷியல்

13

1425479872papayaநன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.
பப்பாளி தோலின் மேல்பகுதியில் உள்ள இறந்த பகுதிகளை நீக்கி, புதிய தோலை மென்மையாகவும், வளமாகவும் மாற்றும் மேலும், பப்பாளியில் உள்ள குணங்கள் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பையும் நீக்கி அரிப்பும் வராமல் தடுக்கின்றன.
ஊங்களுடைய தோலை மென்மையாக வைத்திருக்க விரும்பினால், பப்பாளிப் பழத்தை எடுத்து மெல்லிய படலமாக உங்களுடைய தோலில் தடவி, சில நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவிக் கொள்ளுங்கள்.
பப்பாளி பேஷியல்
2 தேக்கரண்டிகள் தேனுடன், ½ கோப்பை பப்பாளியை அரைத்து வைத்தால் ஃபேஸியல் மாஸ்க் தயார். இந்த கலவையை முகத்தில் மெலிதாக தடவி 15-20 நிமிடங்களுக்கு வைத்திருந்து விட்டு, வெந்நீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்த பின்னர் மாய்ஸ்ட்ரைஸரை தோலில் போட்டுக் கொள்ளுங்கள்.