Home உறவு-காதல் திருமணத்தை பலப்படுத்தும் அந்த 4 விஷயங்கள்…!

திருமணத்தை பலப்படுத்தும் அந்த 4 விஷயங்கள்…!

22

images-14வாழ்க்கை மகிழ்ச்சி, துன்பம், வருத்தம், கோபம் என்ற பல வண்ணங்களை கொண்டதாக இருந்தாலும், வாழ்க்கையில் திருமணம் என்பது கண்டிப்பாக நம்மை சற்றே சிந்திக்க வைக்கும் ஒரு விஷயம் தான்.

அத்தகைய முக்கியமான திருமணத்தில் கருத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்களையும் தெரிந்துகொள்வோம்.

சண்டைகள்:

தம்பதிகளுக்கு இடையே வரும் சண்டையில் அவர்களிடம் இருந்து வெளியாகும் கோபமும் வார்த்தையும் அடுத்தவரை எவ்வளவு பாதிக்கும் என்ற கணக்கீடு இல்லாமல் பேசப்படுகின்றது. ஆனால், சண்டை முடிந்து வரும் அமைதியை தம்பதிகள் பயன்படுத்தி, அவர்களுக்கு இடையே எதற்காக சண்டை வந்ததோ, அதில் உள்ள பிரச்சனைகளை பேசி முடிவு செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே புரிந்தலும், அன்பும், நம்பிக்கையும் அதிகரிக்கின்றது.

வேலைக்கான இடமாற்றம்:

வேலை இழப்பு அல்லது வேலைக்கான இடமாற்றத்தை நல்ல நோக்கில் பார்க்கும் எண்ணத்தை வளர்த்துகொள்ளுங்கள். இருவரும் வேலைசெய்யும் சமயத்தில், ஒருவருக்கு மட்டும் இடமாற்றமாகி வேறு இடத்திற்கு செல்வதால், இருவருக்கும் இடையே அன்பே வளரும். ஒருவரை ஒருவர் எவ்வளவு அன்பும், மரியாதையும் உள்ளது என்பதை நீங்களே உணர்ந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.

திட்டமிடாத குழந்தை:

சமீப காலத்தில் தம்பதி வேலைக்கு செல்வதால் குழந்தையை குறித்து முன்பே திட்டமிட்டு விடுகின்றார்கள். சில சமயங்களில் திட்டமிடாத குழந்தையை வரவேற்க தயாராகுங்கள். குழந்தை என்பது உங்களின் உறவுக்கும் அன்புக்குமான ஒரு சின்னமாக உள்ளது என்பதையும் மறக்காதீர்கள்.

நோய்வாய்படுதல்:

நோய்வாய் பட்டு இருக்கும் கணவனையோ/மனைவியையோ கஷ்டப்படுவதை பார்க்கமுடியாமல் இருப்பதே அவர்களுக்கு இடையேயான அன்பை குறிப்பது தான்! “உன்நோய் குணமாகும் வரை நான் உன்னோடே இருப்பேன் “ என்ற வார்த்தையை கேட்டதும் உங்களின் முகத்தில் வரும் சிரிப்பே உங்களுக்கு இடையேயான அன்பை வெளிபடுத்துவது மட்டுமின்றி, அதை பலப்படுத்தவும் செய்யும்.