Home பெண்கள் தாய்மை நலம் தாய்பால் சுரப்பதை நிறுத்தணுமா? இதை முயற்சி செய்யுங்களேன்!

தாய்பால் சுரப்பதை நிறுத்தணுமா? இதை முயற்சி செய்யுங்களேன்!

31

பிறந்த குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால்தான். குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் தாய்பாலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். குழந்தைகளுக்கு பல் முளைத்த பின்பும் தாய்ப்பால் கொடுப்பது சற்று அசவுகரியங்களை ஏற்படுத்தும். எனவே தாய்ப்பாலை நிறுத்துவதற்கு முன்னதாக குழந்தைகளுக்கு அதற்கு நிகரான சத்தான உணவுகளை பழக்கப்படுத்த வேண்டும்.

தாய்ப்பாலை நிறுத்துவது சாதாரண காரியமல்ல. வலி நிறைந்த நிகழ்வு அது. குழந்தை குடிக்காவிட்டால் மார்பில் தாய்ப்பால் கட்டிக்கொள்ளும். எனவே படிப்படியாகத்தான் வற்ற வைக்கவேண்டும். மருந்து மாத்திரை சாப்பிடுவதை விட வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தாய்பாலை வற்றச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள் படியுங்களேன்.

மல்லிகைப்பூ, வேப்பிலை

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த வேண்டுமானால், மார்பகங்களில் மல்லிகைப் பூவை அரைத்து பற்றுப் போட்டால் அதன் வாசனைக்கு மார்பில் பால் சுரப்பது கட்டுப்படும். அதேபோல் வேப்பிலைகளை மார்பில் வைத்துக்கட்டினால் பால் வரண்டு போகும். படிப்படியாக பால் சுரப்பது நிற்பதுடன் வலியம் குணமாகும். முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி மார்பகத்தில் வைத்துக் கட்டினால் பால் சுரப்பு நின்றுவிடும்.

துவரம்பருப்பு

குழந்தைக்கு கொடுக்கா விட்டால் பால் சுரந்து அதிகமாக மார்பில் கட்டிக்கொள்ளும். இதனால் வலி அதிகரித்து காய்ச்சலை ஏற்படுத்திவிடும். அந்த நேரத்தில் துவரம் பருப்பை ஊறவைத்து அதனை கெட்டியாக அரைத்து மார்பில் பற்றுப் போடவேண்டும். நன்றாக உலந்து இறுக ஆரம்பித்த உடன் கட்டியிருக்கும் பால் வடிய ஆரம்பித்துவிடும்.

அதேபோல் வாழைப்பிஞ்சை அரைத்து மார்பில் பற்றுப் போட பால் சுரப்பது நின்றுவிடும். மார்பில் பால் கட்டிக்கொண்டு வலியும். வீக்கமும் ஏற்பட்டால் வெறும் வாணலியில் வெற்றிலையைப் போட்டு லேசாக வதக்கி. பொறுக்கும் சூட்டில் மார்பில் கட்டினால் வலியும் வீக்கமும் கறையும். எள்ளை வெல்லத்துடன் கலந்து நிறைய சாப்பிட்டால் உடனே பால் கட்டாமல் வடிந்து விடும்.

ஐஸ் கியூப் ஒத்தடம்

டைட்டான பிரா போட்டால் மார்பில் பால் சுரக்காது எனவே மார்பகத்தை லூசாக விடாமல் காட்டன் ப்ரா போட்டு மார்பகத்தை டைட்டாக வைக்கலாம். பால் கட்டிக்கொண்டு மார்பில் வலி ஏற்பட்டால் ஐஸ் கியூப்களை பேக்கில் போட்டு ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் பால் கட்டியிருந்தால் படிப்படியாக கரையும் வலியும் குறையும்.