Home பாலியல் தாம்பத்திய உறவின் போது பெண்களின் மனநிலை

தாம்பத்திய உறவின் போது பெண்களின் மனநிலை

23

download (1)தாம்பத்திய உறவின் போது கணவன், மனைவி இருவரின் உடலும் உள்ளமும் ஒரே லயத்தில் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் அள வில்லாத இன்பத்தை இருவருமே அடையமுடியும். ஆனால் தாம்பத்திய உறவின் போது பெண்கள் என்ன நினைப்பார்கள்? அவர்களின் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில்

* கணவனுடன் காதலில் திளைத்திருக்கும் போதுகூட நாளைக்கு என்ன சமைக்கலாம் என்பது பற்றி பல பெண்கள் நினைத்துக்கொண்டிருப்பார்களாம்.

* அய்யயோ. நான் எப்ப தூங்குறது? காலையில சீக்கிரம் எழுந்திருக்கணுமே என்பது பெரும்பாலான பெண்களின் கவலையாக இருக்கிறது.

* இந்த நேரத்தில குழந்தை கண் முழிச்சிட்டா என்ன பண்றது என்பது 20 சதவிகித பெண்களின் கவலையாம். பெண்களின் மனநிலை இப்படி இருந்தாலும் ஆண்கள் தாம்பத்தியத்தில் முழு இன்பம் அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த ஆய்வு பெண்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் தாம்பத்தியத்தின் போது மனதில் பல்வேறு சிந்தனைகள் ஓடிக்கொண்டிப்பதாக தெரிவித்தது. ஓரளவுக்கு வயதான பின்னர் தம்பதியருக்கு தாம்பத்ய உறவில் நாட்டமின்மை உருவாக தொடங்கி விடுகின்றது. இதற்கு மாறுபட்ட வகையில் உடல் அளவிலும், மனதளவிலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தாம்பத்தியத்தை ஒதுக்குவது இல்லை. அந்த வகையில் அவர்கள் எப்போதுமே மன ஆரோக்கியத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் தாம்பத்யத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக உள்ளனர் என தெரியவருகின்றது.