Home பாலியல் செக்ஸ் உறவை உளவியல் பிரச்சினைகள் பாதிக்கும் ………………..

செக்ஸ் உறவை உளவியல் பிரச்சினைகள் பாதிக்கும் ………………..

18

images (1)மனித மனதிற்கும் செக்ஸ் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். உளவியல்ரீதியாக ஏற்படும் சில பிரச்சினைகள் நம்முடைய உணர்வுகளை தடுத்து தாம்பத்திய உறவுக்கு தடையை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அந்த அளவிற்கு மனித மூளையானது மிகப்பெரிய செக்ஸ் ஆர்கனாக செயல்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாம்பத்தியத்திற்கு தடையை ஏற்படுத்தும் உளவியல்ரீதியான சிக்கல்களையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் அதை படியுங்களேன்.

கோவில், திருவிழா, கலை, கலாச்சாரம் தொடர்பான நிகழ்வுகள் மனிதர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடியவை. அதே சமயம் மன அழுத்தம் தரக்கூடிய சம்பவங்கள் செக்ஸ் உணர்வுகளை குறைக்குமாம். துணையின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளமுடியாத மனதை பாதிக்கும் செயல்கள் செக்ஸ் உணர்வை குறைக்கும்.

தீவிர மனஅழுத்தம்
தீவிரமான மனஅழுத்தம் மீள இயலாத செக்ஸ் பிரச்சினையை உண்டுபண்ணும் என்று தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அது செக்ஸ் ஹார்மோன் சுரப்பின் வேகத்தை கட்டுபடுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலுறவு சிக்கல்கள் – இரு பாலினரிடமும் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்க ‘டாக் தெரபி’ உதவும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். தங்களின் நெருங்கிய உறவுகளின் மூலம் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தப் பிரச்சினைகளை துணையுடன் அமர்ந்து பேசுவதன் மூலம் தீர்ப்பதோடு தாம்பத்ய உறவிலும் உற்சாகமாக ஈடுபடலாம்.

உடல் துர்நாற்றம்
நல்ல வாசனைகள் எவ்வாறு செக்ஸ் உணர்வுகளை கிளர்ந்தெழச்செய்கிறதோ அதுபோல வாழ்க்கைத் துணையின் உடலில் ஏற்படும் சில விரும்பத்தகாத வாசனைகள் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். உடல் உறவின் போது அந்த வாசனை அதிகரிப்பதால் உங்கள் துணைக்கு செக்ஸில் ஈடுபடமுடியாத நிலை ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே இந்த சிக்கல்களை தீர்க்கவும், உடலில் எழுத்து துர்நாற்றத்தைப் போக்கவும் சரியான சரியான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மனம் சார்ந்த பாலியல் பிரச்சினைகளை சரியான உளவியல் நிபுணர்களிடம் கவுன்சிலிங் செல்வதன் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.

அச்ச உணர்வு
அதேபோல் ஒருவித அச்ச உணர்வு அவர்களை நிம்மதியாக உறவில் ஈடுபடமுடியாமல் செய்துவிடும். யாராவது பார்த்து விடுவார்களோ, உறவின் போது தடங்களை ஏற்படுத்திவிடுவார்களோ என்ற நினைப்பும், மனதில் ஏற்படும் பயஉணர்வும் இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் எனவே இதுபோன்ற அச்ச உணர்வுகளை போக்கி மனதை சமநிலைப் படுத்தினால் அவர்களால் இயல்பாக தாம்பத்ய உறவில் ஈடுபடமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
மனம் சார்ந்த பிரச்சனைகளில், பாலியல் சிக்கல்களும் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. பாலியல் பிரச்சனைகள் பற்றி முக்கிய மாக அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது இரண்டு அம்சங்கள். ஒன்று இந்தப் பிரச்சனைகள் பொதுவானவை. மற்றொன்று தற்காலிகமானவை. எல்லோருடைய வாழ்விலும் பாலினப் பிரச் சனைகள், சிக்கல்கள் வந்து பின்பு மறைந்து போய் இருக்கும். எனவே பாலியல் என்பது உடல் தொடர்புடையது மட்டுமல்ல. அது மனதோடு மூளையோடு தொடர்புடையது என்றும் உளவியல் ரீதியான சில சிக்கல்கள் அதனை கட்டுப்படுத்தும் என்றும் நிபுணர்கள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். அதற்கான தீர்வுகளையும் தெரிவித்துள்ளனர்.