Home பெண்கள் உடல் கட்டுப்பாடு செக்ஸ் உறவால் எடை கூடுமா?

செக்ஸ் உறவால் எடை கூடுமா?

20

resize_20130316201025செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படுவது சுத்தமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

ஒரு பெண் ரெகுலராக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், அவரது உடல் பெருத்து விடும். மார்புகள் பெரிதாகி விடும், இடுப்புகள் பெருத்து விடும் என்ற நம்பிக்கை பெண்களிடையே உள்ளது.

ஆனால் இதெல்லாம் ஒரு விதமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

அதேசமயம், செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், செக்ஸ் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.

அதேபோல கல்யாணத்திற்குப் பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல்லை.

செக்ஸ் காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. செக்ஸ் உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, கல்யாணம்தான் ஆகி விட்டதே என்ற ரிலாக்ஸ் மனப்பான்மை, அதுவரை கடைப்பிடித்து வந்த உணவு, உடற்பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தளரும்போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

சிங்கிளாக இருப்பவர்களை விட கல்யாணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைகிறது.

கல்யாணத்திற்குப் பிறகும், செக்ஸ் உறவைத் தொடங்கிய பிறகும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என யாராவது விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்