Home பெண்கள் தாய்மை நலம் சந்ததியை உருவாக்குவது சாதாரண விசயமில்லை !

சந்ததியை உருவாக்குவது சாதாரண விசயமில்லை !

22

தம்பதியர் இருவருமே சம பங்களிப்புடன் மனமொத்து இருந்தால் மட்டுமே மனைவியால் கருத்தரிக்கமுடியும். ஆரோக்கியமான கருவை சுமக்க முடியும். சந்ததியை உருவாக்குவது என்பது சாதாரண விசயமில்லை. எனவே தாய்மைக்கு திட்டமிடல் என்பது அவசியமானது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

இரவு பார்ட்டிக்கு நோ

இரவு நேர பார்ட்டிக்கு தடை லீவ் விடுங்கள். அப்பொழுதுதான் உங்கள் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். பார்ட்டியில் விடிய விடிய குடித்துவிட்டு, புகைத்துவிட்டு ஆட்டம் போடுவதால் ஆண்களின் உயிரணுக்கள் உயிரணுக்கள் பாதிக்கப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மருத்துவர் ஆலோசனை

கணவருக்கு எதேனும் நோய்கள் இருந்தால் அது மனைவியையும், பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கும். எனவே உடல் ஆரோக்கியம் குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம். மரபியல் ரீதியான கோளாறுகளையும், உயிரணுக்களின் எண்ணிக்கையும் சோதனை செய்து தெரிந்து கொள்வது அவசியம்.

பொருளாதார திட்டமிடல்

பூமியில் பிறக்கப்போகும் குழந்தையை வரவேற்க பொருளாதார ரீதியாக திட்டமிடல் அவசியம். அப்பொழுதுதான் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். கருவுற்ற பின்னர் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது, கர்ப்பிணிக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், சத்தான உணவுகள் வாங்குவதற்கும் பணம் அவசியம். எனவே அதற்கான திட்டமிடல் ஆண்களுக்கு இருக்க வேண்டும்.

பிட்டாக இருங்கள்

ஆண்கள் எந்த அளவிற்கு பிட்டாக இருக்கின்றனரோ அந்த அளவிற்கு ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாகும். எனவே ஆண்களே குழந்தைப்பேறு என்பது பெண்கள் தொடர்புடையது மட்டுமல்ல என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிடுங்கள் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.