Home பெண்கள் அழகு குறிப்பு கை, கால்களை அழகு படுத்த வழிகள்

கை, கால்களை அழகு படுத்த வழிகள்

19

tamil-beauty-300x150அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்காக எத்தனையோ பராமரிப்புக்களை முகத்திற்கு செய்கிறோம். உடலில் முகத்திற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை மற்ற பாகங்களுக்கும் கொடுக்க வேண்டும். முக்கியமாக கை மற்றும் கால்களுக்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் எப்படி முகம் மற்றவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே போல் மற்றவர்களின் கண்களுக்குப் படும்படியான கை மற்றும் கால்களையும் நன்கு அழகாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்.
அவ்வாறு சரியாக கவனிக்காவிட்டால், அது பின் சருமத்தில் மற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி, உடலின் அழகையே கெடுத்துவிடும். கை மற்றும் கால்களை எப்படி, பராமரிக்க வேண்டும் என்று பார்ப்போமா
கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் நன்கு அழகாக பொலிவோடு மின்னுவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், நகங்களில் போதிய எண்ணெய் பசையானது கிடைத்து, நகங்கள் வலிமையோடு இருக்கும். வேண்டுமெனில் ஆலிவ் ஆயிலையும் பயன்படுத்தலாம்.
சப்பாத்தி மாவு பிசைந்த பின்னர் கைகளை கழுவாமல், அப்போது கைகளில் சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து, கைகளில் சிறிது நேரம் மசாஜ் செய்தால், கைகளில் உள்ள அழுக்குகள் போவதோடு, இது ஒரு சிறந்த மாய்ச்சுரைசராகவும் இருக்கும். வெதுவெதுப்பான நீரில் உப்பு மற்றும் வாஸ்லின் சேர்த்து கலந்து, பாதங்களை அதில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, குதிகாலை சுத்தம் செய்ய உதவும் பிரஷ் அல்லது படிகக்கல்லை வைத்து ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும்.
மேலும் தினமும் படுக்கும் முன் கால்களில் ஹீல்ஸ் க்ரீம்மை தடவி படுத்தால், பாதங்கள் பொலிவோடு இருப்பதோடு, குதிகால் வெடிப்பும் வராமல் இருக்கும். கைகள் வறட்சியுடன், கடினமாக இருந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், சிறிது சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கைகளை அதில் சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை கால்களில் தடவி, சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால்கள் நன்கு பொலிவோடு மென்மையாக இருக்கும். குதிகால் வெடிப்பு இருப்பவர்கள், தேனை குதிகாலில் தினமும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், குதிகால் வெடிப்பை போக்கலாம். வேண்டுமெனில் தேனிற்கு பதிலாக, தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
கை மற்றும் கால்களுக்கு ஸ்கரப் செய்ய வேண்டுமெனில், அதற்கு ஓட்ஸ், தேன், பால் மற்றும் தண்ணீரை கலந்து, கை மற்றும் கால்களில் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10 முதல் 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கை மற்றும் கால்களில் உள்ள அழுக்குகள் அனைத்தும் போய்விடும்.