Home பாலியல் குதம் வழியான பாலியல் உறவு என்றால் என்ன?

குதம் வழியான பாலியல் உறவு என்றால் என்ன?

54

01-71Ø குதம் என்றால் மலவாசல் Anus என்றும் அழைக்கலாம். குதம் வழியான பாலியல் உறவு என்பது ஆண்குறியைக் குதத்திற்குள் புகுத்தி விடுவது ஆகும். குதம் வழியிலுள்ள இறுக்கான அமைப்பு ஆணின் பாலியல் புறவுறுப்புக்கு மேலதிக தூண்டுதல் வழங்குகிறது. பெண்களைப் பொறுத்தவரை பெரும் வேதனையும் வலியும் தருகிறது. குதத்தைச் சுற்றியுள்ள தசைகளை ஓய்வில் வைத்திருக்கும் உத்தியை அறிந்திருந்தால் மட்டுமே இந்த வேதனையிலிருந்து ஓரளவு விடுதலை பெறலாம். பெண் இந்த முறையால் இன்பம் அடைவதில்லை.

Ø அநேக ஆண்களும் பெண்களும் குதம் வழியான பாலியல் உறவினை வாழ்நாள் முழுவதும் பெறாமலேயே இருக்கின்றனர்.

Ø ஓரினச் சேர்க்கையில் Homosex ஈடுபடும் இரு ஆண்களாயின் குதம் வழியாக ஆண்குறி நுழையும் போது இருவருக்கும் இன்ப உணர்வு ஏற்படுகிறது. புரோஸ்டேட் Prostate சுரப்பியின் இன்பம் வாங்கிகளின் மீது ஆண்குறி உராயும் போது இன்பம் சுரக்கின்றது. (Prostate சுரப்பி தான் விந்தை திரவம் கலந்ததாகத் தருகிறது)

Ø குதவழி பாலியல் உறவாலும் கருத்தரிப்பு நடைபெறாது. ஆனால் AIDS பரவும் அபாயம் பெரிதும் உண்டு. குதப்பாதை மிகவும் இறுக்கமாக இருப்பதனால் அதிக அளவு உராய்வும் அதன் பயனாகச் சிறுகாயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக விந்து மற்றவரின் குருதி ஓட்டத்துடன் கலந்து விட இடமுண்டு. மற்றவரிடம் AIDS வியாதிக்கான HIV இல்லை என்று உறுதியாகத் தெரியாவிட்டால் குதவழி பாலியல் உறவுக்கென அமைந்த கருத்தடை உறையையோ அல்லது சாதாரண கருத்தடை உறைதான் இருப்பின் அதில் இரண்டு உறைகளையோ அணிந்து கொண்டு பாலியல் உறவில் ஈடுபட வேண்டும்.