Home பெண்கள் அழகு குறிப்பு கிளீன் ஷேவ் அபாயம்…. எச்சரிக்கை!

கிளீன் ஷேவ் அபாயம்…. எச்சரிக்கை!

33

clean-500x500இளம் பெண்களுக்கு தான் தாடி வைத்த ஆண்களை பிடிக்கும் என்பார்கள். ஆனால் ஆண்டிபயாடிக்-க்கு கூட தாடி வைத்த ஆண்களை தான் பிடிக்கிறதாம். “இதென்னப்பா டிப்ரன்ட்டா-க்கீது..” என்று யாரும் வாயை பிளக்க வேண்டாம். இதை ஆய்வின் மூலமாக தான் ஊர்ஜிதம் செய்துள்ளார்கள்.
சமீபத்தில் “ஜர்னல் ஆப் ஹாஸ்ப்பிடல் அண்ட் இண்ஃபெக்ஷன்” என்ற மருத்துவ இதழில் வெளிவந்த ஆய்வறிக்கையில் தாடி வைத்த ஆண்களை விட முழுமையாக ஷேவ் செய்த ஆண்களுக்கு தான் அதிகமாக பாக்டீரியா தொற்று அபாயம் ஏற்படுகிறது என கூறுயுள்ளனர்….
குறைந்த பாக்டீரியா
தாடி வைத்துக் கொள்வதால் குறைந்தளவு பாக்டீரியா தாக்கம் தான் ஏற்படுகிறதாம். மேலும் தாடியில் தங்கும் பாக்டீரியாக்கள் சாத்தியமுள்ள வகையில் புதிய ஆண்டிபயாடிக் உண்டாக காரணமாக இருக்கிறது என ஐரோப்பிய பிரபல ஊடகமான இண்டிபெண்டன்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆய்வறிக்கை
“Journal of Hospital Infection” என்ற பத்திரிக்கையில், தாடி வைத்திருக்கும் ஆண்களை விட முழுமையாக ஷேவ் செய்த ஆண்களுக்கு தான் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலான நச்சு தொற்றுக்கள் ஏற்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் பங்கெடுத்தவர்கள்
இந்த ஆய்வில் தாடி வைத்த, தாடி இல்லாத 408 ஆண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் வைத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
பாதிப்பு அளவு
முழுமையாக ஷேவ் செய்த ஆண்கள் தான் ஏறத்தாழ மூன்று மடங்கு அளவு அதிகமாக methicillin-resistant staph aureus (MRSA) எனும் வகையான பாக்டீரியாக்களை தங்கள் கண்ணத்தில் ஏந்தி திரிகிறார்களாம்.
ஸ்டாபிலோகோகஸ் ஆரோஸ்
ஸ்டாபிலோகோகஸ் ஆரோஸ் எனும் பாக்டீரியாவும் 10% அதிகம் முழுமையாக ஷேவ் செய்த ஆண்கள் மேல் தான் பரவுகிறதாம். இந்த பாக்டீரியாக்கள் நிறைய சரும தொற்று, சுவாசக் கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாம்.
பராமரிப்பு அவசியம்
என்னதான் தாடி நல்லது என்று கூறினாலும். அழுக்கு அதிகமாக சேராமல் பராமரிப்பு செய்ய வேண்டியதும் அவசியம். இல்லையேல் அழுக்கின் காரணமாக கூட நச்சுக்கள் சருமத்தில் அதிகம் பரவலாம்.