Home உறவு-காதல் காதல் கடிதம்..!!

காதல் கடிதம்..!!

14

1videoகாதல் என்று வந்து விட்டால் கடிதம் இல்லாமலா, கவிதை இல்லாமலா…? தகவல் தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் காதலர்கள் தங்களின் அன்பை பரிமாறிக்கொள்ள எண்ணற்ற வசதிகள் வந்துவிட்டன. இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை கடிதங்களும், வாழ்த்து அட்டைகளும் காதலர்கள் அன்பை பரிமாறும் வழியாக இருந்தது. தொலைபேசி, மொபைப்போன், இ மெயில் என பல்வேறு வசதிகள் வந்த பின்னர் கடிதம் எழுதும் பழக்கம் வழக்கொழிந்து விட்டது எனலாம்.

உயிரில் இருந்து உருவான வார்த்தைகளை எடுத்து அதை மையில் கலந்து காகிதத்தில் வடிக்கும் கடிதத்திற்கு உள்ள மகத்துவமே தனிதான். அதை கையில் எடுக்கும் போதே ரத்தத்தின் ஒவ்வொரு அணுக்களிலும் உற்சாகம் ஊற்றெடுக்கும். அதேபோல் ஒரு காதல் கடிதத்தை இந்த காதலர் தினத்தில் உங்கள் பிரியமானவர்களுக்கு பரிசளியுங்கள். அப்புறம் பாருங்கள் உங்களுடையவர்க அடையும் மகிழ்ச்சியை.

உயிர் வரை ஊடுருவும்

நேசத்திற்குரியவரை கண்கள் கண்டதும் மூளையின் நரம்புகளில் ரசாயனமாற்றம். இதயத்தில் தெறிக்கும் மின்னல் காதலின் வருகையை உணர்த்திவிடும். முதல் நாள் பார்த்த இடத்தில் மறுநாளும் சந்திக்க மனம் ஏங்கும், கால்கள் தானகவே அந்த இடத்தை நோக்கி நகரும். இது காதல் ஏற்படுத்தும் மாற்றங்கள். எனவே நம்முடைய காதலை எங்கு எவ்விதம் தெரிவிப்பது என்று மனம் ஏங்கித் தவிக்கும். தூக்கத்தை தொலைத்த ராத்திரிகள், உணவை தவிர்த்த பொழுதுகள் என காலம் கடத்துவதை விட மனதை தொடும் வகையில் கடிதம் எழுதி அதை கவித்துவமாக பரிசளிக்கலாம். காதல் உணர்வுகளுடன் கவித்துவமாய் வடித்த அந்த கடிதம் நிச்சயம் உங்களவரின் உயிர் வரை ஊடுருவும்.

ஸ்பெஷல் வார்த்தைகள்

காதல் கடிதம் எழுதுவது சாதரண விசயமல்ல. நலம் நலமறிய ஆவல்… என்ற சாதாரண வார்தைகளை இட்டு நிரப்பி தருவதை விட காதலை உணர்த்தும் வகையில் ஸ்பெசலான வார்த்தைகளைக் கொண்டு எழுதலாம்.

கடிதத்தில் முதலில் சந்தித்த இடம், ஈர்த்த விசயங்கள், போன்ற காதல் நினைவுகளை டச்சிங்காக எழுதலாம். அதே சமயம் அதீத அலங்கார வார்த்தைகள் போட்டு படிப்பவர்களை குழப்ப வேண்டாம். எனவே சிறப்பான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கடிதத்தை எழுதுங்கள் அது காதலுக்கு ஒகே சொல்ல வைக்கும்.

உயிர் வரை தொடும்

கடிதத்தில் தொடக்கம் எவ்விதம் காதல் வார்த்தைகள் நிரம்பியதாய் இருக்கவேண்டுமோ அதோபோல் முடிவும் காதல் உணர்வுகள் நிரம்பியதாக இருக்கவேண்டும்.

கடிதத்தின் உரையின் மீது சிவப்பு ரோஜாவை ஒட்டி, சிவப்பு நிற ரிப்பனால் இதய வடிவத்தில் கட்டி பார்க்கும் போதே ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தலாம். இத்தகைய கடிதங்கள் மனங்கவர்ந்தவரின் இதயத்தை ஊடுருவும்.