Home பெண்கள் உடல் கட்டுப்பாடு கழுத்து எலும்புகளை உறுதியடைய செய்யும் அதோமுக சுவானாசனம்

கழுத்து எலும்புகளை உறுதியடைய செய்யும் அதோமுக சுவானாசனம்

29

Captureசெய்முறை :

விரிப்பில் முதலில் குப்புறப் படுத்துக்கொண்டு மூச்சினை நன்கு உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். பின்பு இரண்டு கால்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து பின்பக்கமாக நீட்டவும் வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் நெஞ்சுப் பகுதியை ஒட்டி தரையில் பதிக்கவும். அச்சமயத்தில் விரல்கள் முன்நோக்கி இருக்க வேண்டும். மூச்சுக் காற்றினை ஆழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டே தலை, இடுப்பு மற்றும் பிட்டத்தை மேல் நோக்கித் தூக்கியபடி முதுகை நன்றாக வளைக்கவும்.

மூச்சை வெளிவிட்டுக் கொண்டே இடுப்பை இன்னும் மேல் நோக்கித் தூக்கி தலைப்பகுதியை உள்பக்கமாக கீழ் நோக்கி கொண்டு வந்து உச்சந்தலையை தரையில் பதிக்கவும். செய்யும்போது கால்கள் வளையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால் பாதங்கள் முழுமையாக தரையில் பதிந்திருக்க வேண்டும். கைகளும் வளையாமல் நேராக இருக்க வேண்டும். இந்த நிலையில் சுமார் 30 விநாடிகள் வரை இருந்த பின்பு மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டே குதிகால்களைத் தரையிலிருந்து உயர்த்தி, இடுப்பைக் கீழ் நோக்கி இறக்கி தலையை தரையில் இருந்து எடுக்க வேண்டும்.

இறுதியாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே இயல்பு நிலைக்கு திரும்பவும்.

பயன்கள் :

முதுகுப் பகுதிகளின் பிடிப்புகள், சுளுக்குகள் நீங்க உதவி புரிகிறது. தொடைகளின் பின்பகுதி, முழங்கால், கணுக்கால் பகுதிகளை வன்மையடையச் செய்கிறது.

முதுகு தண்டுவடப் பகுதியை வன்மை அடையச் செய்கிறது. இரு கை மற்றும் கால்களுக்கு உறுதித் தன்மையை அளிக்கிறது. இந்த ஆசனம் தோள்பட்டை வலியைப் போக்கி வலுப்படுத்தும் சிறந்த ஆசனம் ஆகும்.

தலைப் பகுதிக்கு இரத்த ஒட்டத்தை அதிகரிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது. வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிவதால் ஏற்படும் தொப்பையை குறைக்க உதவுகிறது. கழுத்து எலும்புகளை உறுதியடையச் செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்களை சரிசெய்ய உதவுகிறது.