Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணி மனைவியை காதலுடன் அணுகுங்கள்!

கர்ப்பிணி மனைவியை காதலுடன் அணுகுங்கள்!

31

ssssssதாய்மைக்கு தனி அழகுண்டு. மேடிட்ட வயிறு, சற்றே பெரிதான மார்பகங்கள், மெருகேறிய கன்னங்கள், நெற்றியில் மின்னும் பளபளப்பு என கர்ப்பகாலத்தில் பெண்ணின் அழகு நூறு சதம் அதிகரித்திருக்கும். கர்ப்பகாலத்தில் மனைவியை காணும்போது கணவருக்கு உணர்வுகளும், கிளர்ச்சியும், கூடத்தான் செய்யும். ஆனால் உடல்நலனை கருத்தில் கொண்டு, மனைவிக்கு வலிக்குமோ, குழந்தைக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற எண்ணம்தான் மனைவியை அணுகவிடாமல் செய்துவிடும். கர்ப்பகாலத்தில் தயங்கி தயங்கி, அச்சத்தோடு அணுகுவார்கள் கணவர்கள். இந்த அச்சம் அவசியமற்றது என்கின்றனர் மகப்போறு மருத்துவர்கள். கர்ப்ப காலத்தில் கணவனின் அருகில் அதிக நேரம் இருக்கவேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கின்றனர். இது இயல்பான ஆசையும் கூட. சின்னச் சின்ன தழுவல்கள், அவ்வப்போது ஆசையாய் சில முத்தங்கள் என மனைவியின் விருப்பம் அதிகரிக்குமாம். இம்சிக்காத இயல்பான கூடலும் வேண்டும் என்று கர்ப்பிணி மனைவிகள் எதிர்பார்ப்பார்க்கின்றனர். ஆனால் கணவரின் அச்ச உணர்வு காரணமாக தங்களின் தேவைகளை அவர்கள் வெளிக்காட்டுவதில்லையாம்.

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு வாந்தி மயக்கம் என சோர்வை ஏற்படுத்தும் கரு கூடிவரும் காலம் என்பதால் சற்றே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஆனால் நான்காம் மாதத்தில் இருந்து எட்டாவது மாதம் வரை சாதாரணமாக, சிரமமில்லாத உறவுகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மனைவியின் கூடுதல் அழகு ஆண்களின் கிளர்ச்சியை அதிகரிக்கும். ஆவலோடு அணுகுவதால் மனைவிக்கும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும்,மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். கர்ப்பிணி மனைவியை கையாளும் போது கவனம் அவசியம். உற்சாகத்தில் சிலர் தூக்கி சுற்றிவிடுவார்கள். அதுபோன்ற ரிஸ்க் எல்லாம் எடுக்கவேண்டாம். மெதுவாய் மசாஜ் செய்து விடுங்கள். கை, கால்களில் லேசாய் வீக்கம் இருக்கும், வலி இருக்கும் மசாஜ் மூலம் வலிகளைப் போக்கலாம். நெற்றியில் தொடங்கி பாதம் வரை முத்தமிடுவதன் மூலம் கிளர்ச்சியை அதிகரிக்கலாம். அதன் பின்னர் அதிக அழுத்தம் தராதபொசிசன்களில் இணையலாம். இதனால் கர்பிணிகளின் உடலில் உற்சாகம் தரும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கிறதாம். கர்ப்பகால கலவி கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்கின்றனர் நிபுணர்கள்.