Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் புதுவித வைரஸ் நோய்!- உலக சுகாதார மையம் எச்சரிக்கை

கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் புதுவித வைரஸ் நோய்!- உலக சுகாதார மையம் எச்சரிக்கை

22

18-1434624698-thyroid-during-pregnantதென் அமெரிக்க நாடான பிரேசிலில் ‘ஷிகா’ என்ற புதுவிதமான வைரஸ் நோய் தாக்கியது. இது, கர்ப்பிணி பெண்களை தாக்கி அதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்க செய்கிறது.

இதனால் நோய் தாக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகள் தலை சிறியதாக இருக்கும். கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த நோய் மெக்சிகோ உள்ளிட்ட அதன் அமெரிக்க நாடுகளில் பரவி வருகிறது.

இந்த நோயை ‘ஏடிஸ் ஏஜிப்டி’ என்ற கொசு பரப்புகிறது. இது கடிப்பதன் மூலம் ‘ஷிகா’ என்ற வைரஸ் கிருமி கர்ப்பிணி பெண்களின் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.

தொடக்கத்தில் தென் அமெரிக்க நாடுகளில் மட்டும் பரவிய இந்தநோய் தற்போது வட அமெரிக்க நாடுகளிலும் தாக்கியுள்ளது. வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் 55 நாடுகள் உள்ளன. அவற்றில் 21 நாடுகளில் இந்நோய் பரவியுள்ளது. இத்தகவலை உலக சுகாதார மைய தலைவர் மார்க்கரெட்கான் தெரிவித்துள்ளார்.

கனடா, சிலி ஆகிய நாடுகளில் தற்போது இந்த நோய் தாக்கவில்லை. இருந்தாலும் அங்கு பரவ வாய்ப்பு உள்ளது. அதே போன்று அமெரிக்காவில் இது தாக்கவில்லை.

அதே நேரத்தில் பிரேசிலில் ‘ஷிகா’ நோய் தாக்கிய பெண்ணுக்கு அமெரிக்காவில் உள்ள ஹவாயில் மூளை பாதிப்படைந்த குழந்தை பிறந்துள்ளது என்றும் அவர் கூறினார். ‘ஷிகா’ நோயை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்களால் தான் டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற வைரஸ் நோய்களும் பரவுகின்றன.