Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகளுக்கு மூன்று மாதங்களில் ஏற்படும் உடல் நல மாற்றம், பாதுகாப்பு முறை

கர்ப்பிணிகளுக்கு மூன்று மாதங்களில் ஏற்படும் உடல் நல மாற்றம், பாதுகாப்பு முறை

31

என்னுடைய திருமணம் காதல் திருமணம். என் பெற்றோர், உற்றார், உறவினர் அனைவரையும் எதிர்த்து என்னவரின் கைப்பிடித்தேன். எங்கள் திருமணம் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் நடைபெற்றது. திருமணத்தின் போது இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை என்றாலும் நாட்கள் செல்லச் செல்ல என் கணவர் வீட்டாரின் போக்குவரத்து இருக்கத்தான் செய்தது. இதனை பார்க்கும் போது எனக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் தோன்றும், மனம் வேதனைப்படும்.

எனினும் என் கணவர் என்னை தன்னால் முடிந்த அளவு அன்பு செலுத்தி அரவணைத்து ஆதரவு கரம் நீட்டி என்னை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டார். நாட்கள் உருண்டது, இருவரும் படிப்பு, தகுந்த வேலையில் இருந்ததால் போதிய அளவு சம்பாதித்துக் கொண்டிருந்தோம். அதனால் இருவரும் எங்களுக்குத் தேவையான வசதிகளை எங்கள் வருமானத்தில் இருந்தே பார்த்துக் கொண்டோம். எங்களுக்குத் திருமணம் நடந்து 5 வருடங்கள் ஆகிறது.

எல்லா பெண்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் தாய்மை பேறு எனக்கு எட்டா கனியாகவே இருந்து வருகிறது. நான் என் கணவரிடம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள எவ்வளவோ கேட்டும் மறுக்கிறார். சரி, ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் சம்மதிக்க மறுக்கிறார். என்னுடைய கணவரின் உற்றார், உறவினர் அனைவரும் குழந்தையை பற்றிக் கேட்கும் போது என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. சமீபத்தில் நான் என்னுடைய கணவரின் குடும்பத்தாரிடம் குழந்தையின்மை பற்றி கேள்வி எழுந்ததால் என் கோபத்தை வெளிப்படுத்திவிட்டேன்.

இதனால் எனக்கும் என் கணவருக்கும் பெரிய வாய்ச்சண்டை வந்தது. அது முற்றி அவர் என்னை அடித்துவிட்டார். மனம் வெறுத்து வீட்டை விட்டு வந்து மகளிர் விடுதியில் தங்கியுள்ளேன். எங்கள் நண்பர்கள் எங்களுக்கு சமரச முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், என் கணவரின் உற்றார், உறவினர், பெற்றோர் அனைவரும் என் கணவரையும் என்னையும் நிரந்தரமாகப் பிரிக்க சதி செய்து கொண்டிருக்கிறார்கள்.

நான் என் கணவரிடம் அவருடைய குடும்பத்தின் தொடர்பை துண்டித்தால் மட்டுமே இணைந்து வாழ முடியும் என்று கூறிவிட்டேன். என் கணவர் என்னை குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக சட்டப்படி விவாகரத்து செய்ய இயலுமா? நான் என் கணவரின் சம்மதம் இல்லாமல் தத்து எடுக்க முடியுமா? அது சரியா?

நம் இந்திய சமுதாயத்தில் வீட்டின் பெரியவர்கள், உற்றார், உறவினர், ஏன் நண்பர்கள் அனைவரும் குழந்தையைப் பற்றி விசாரிப்பது பெரும்பாலும் இயல்பாக நடக்கக்கூடிய ஒரு செயல். ஒரு வேளை உங்கள் குடும்பத்தாரின் போக்குவரத்து இருப்பின் அவர்களும் இந்தக் கேள்வியை எழுப்பக்கூடிய வாய்ப்புள்ளது. கண்டிப்பாக குழந்தை இல்லாத தம்பதிகள் குறிப்பாக பெண்கள் மனவேதனை படுவார்கள். யாராக இருப்பினும் அடுத்தவர் மனம் நோகாமல் நடப்பது சிறப்பு.

மேலும் குழந்தையின்மை என்ற ஒரே காரணத்திற்காக கண்டிப்பாக ஒரு நபர் தன் துணையிடமிருந்து விவாகரத்து கோர எந்த மத சட்டமும் அனுமதிப்பதில்லை. (நம் நாட்டில் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்கள் அவரவரின் மதத்தின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது.) மேலும் ‘தத்து’ எடுத்தலை நம் நாட்டில் அனைத்து மதச்சட்டங்களும் ஒரே மாதிரி நோக்குவதில்லை.

எனினும் இந்து மதத்தை சார்ந்தவர்களாயின் இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்பு சட்டம் 1956ன் கீழ் தத்து எடுக்க இயலும். எனினும் அந்த சட்டத்தின்படி கணவரின் சம்மதத்துடனேயே நீங்கள் தத்து எடுக்க இயலும். விவாகரத்து பெற்ற பெண்ணாக இருப்பின் தனித்து இயங்க சட்டம் அனுமதிக்கும். உங்கள் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்வது மனக்கசப்பின் காரணத்தால்தான், அது சட்டப்படியான பிரிவு கிடையாது. அதனால் கணவரின் ஒப்புதல் இல்லாமல் இந்த சட்டத்தின்கீழ் தத்து எடுத்தல் இயலாது.

மேலும் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் 2006 சட்ட திருத்தத்தின்படி கண்டிப்பாக ஆதரவற்ற ஒரு குழந்தையினை அந்த சட்டம் கூறும் விதிகளுக்கு உட்பட்டு உங்களால் தத்து எடுக்க இயலும். தத்து என்பது ஒரு குழந்தையின் எதிர்கால மனம் மற்றும் உடல் நலம் சீராக இருக்க செய்யப்படும் ஏற்பாடுதான். அதனால் சட்டம் அனுமதித்தாலும் உங்கள் கணவரிடம் ஏற்பட்டுள்ள பிரிவினையால் உங்கள் இருவருக்கும் உள்ள மனக்கசப்பால் தத்து எடுக்கும் குழந்தைக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பின், தத்து நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

உங்கள் கணவரின் குடும்பத்தாரின் வருகையை நீங்கள் முதலில் மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பொசசிவ்னஸ் என்று சொல்லக் கூடிய உங்கள் கணவர் உங்களுக்கு மட்டுமே என்று நினைத்து அவரின் மற்ற உறவுகளை ஏற்றுக்கொள்ளாததுதான் உங்கள் விஷயத்தில் இருக்கும் அடிப்படை பிரச்னை. முதலில் உங்கள் கணவரும் நீங்களும் ஒரு குடும்ப நல ஆலோசகரை நண்பர்களின் உதவியுடன் சந்திக்க முயற்சி செய்யவும். மேலும் சிறு மனக்கசப்பின் காரணமாக குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்தல் என்பது அன்பையும் அன்னியோன்யத்தையும் குறைக்குமே தவிர அதிகப்படுத்தாது.

கணவர் மீது மனைவி வைத்திருக்கும் அன்பு மகத்தானதுதான். ஆனால், அவரின் மீது மற்ற உறவுகள் வைத்திருக்கும் அன்பு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. அதனால் உங்கள் கணவரை அவரின் உறவுகளிடமிருந்து பிரிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள். இது உங்கள் கணவருக்கு உங்கள் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பை கண்டிப்பாக மாற்றும்.

ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் அளவு பெரிய மனது கொண்ட நீங்கள் கண்டிப்பாக உங்கள் அன்பு கணவரிடம் கோபிக்காமல் அவர் உற்றார் உறவினரை அனுசரித்து செல்வது நலம். மேலும் உங்கள் இருவருக்கும் உள்ள மனக்கசப்பை மேலும் வளர்க்காமல் உடனடியாக சமரச முயற்சியில் இறங்குங்கள். விட்டுக்கொடுப்பதுதான் வெற்றிகரமான வாழ்விற்கு அடித்தளம். நீங்களும் உங்கள் கணவரும் விரைவில் இணைந்து எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகள்.