Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்க் குமட்டலைத் தடுக்க‍ . . . எளிய வழிகள்

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்க் குமட்டலைத் தடுக்க‍ . . . எளிய வழிகள்

20

01-pregnancy-2-300பெண்கள், கர்ப்ப‍மாக இருக்கும்போது வாய்க்குமட்ட‍ல் ஏற்படுவது இயற்கையே என்றாலும், இந்த வாய்க் குமட்ட‍ல் அவர்களுக்கு ஒருவித அசௌகரியத்தை
ஏற்படுத்தும். இந்த வாய்க் குமட்ட‍லை தடுக்க‍ கீழ்க்காணும் சிறந்த எளிய வழிகளை பின் பற்றி பயனடையுங்கள்
* படுக்கையில் இருந்து அவசரப்படாமல், அதிராம ல், ஒரு பக்கமாக ஒருக்களித்து படுத்து கொண்ட பிறகு எழுந்திருக்கவேண்டும்.
* குளிர்ந்த தண்ணீர், எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழச்சாறு போன்ற எந்த பானமாக இருந்தாலும் வாயில் வைத்து சிறிது சிறிதாக உறிஞ்சி குடியுங் கள். வெதுவெதுப்பான தண்ணீர் பருகினால் குமட்ட ல் உணர்வு இல்லாத துபோல் சிலருக்கு தோன்றும். அவர்கள் அதனை கொஞ்சம் கொஞ்சமாக பருகலாம்.
* சமையல் வாசனை காரணமாக குமட்டல் ஏற்பட் டால், கைவசம் எப்போதும் தயாராக எலுமிச்சை அல்லது ஆரஞ்சு வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து இவற்றை முகர்ந்து கொண்டே இருந்தால் குமட்டல் வருவதை தவிர்க்கலாம். இஞ்சி அல்லது கிராம்பை மென்று கொண்டு இருந்தாலும் குமட்ட லை தடுக்க முடியும்.
* பாலுக்கு பதில் காலை நேரத்தில் எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம்.
* காலை நேரத்தில் எலுமிச்சை பழச்சாறில் கொத்து மல்லியை கிள்ளி போட்டு குடித்தால் குமட்டல் வராமல் தவிர்க்கலாம்.