Home பெண்கள் அழகு குறிப்பு கருவளையம் இருக்கிறதா..? கவலையை விடுங்க !

கருவளையம் இருக்கிறதா..? கவலையை விடுங்க !

31

கண்கள்தான் நம் உடலில் ஜன்னல்கள். ஆனால் அந்தக் கண்களின் அழகைக் கெடுக்கும் விதமாக ஆண், பெண் பேதமின்றி பலருக்கும் கருவளையப் பிரச்னை உள்ளது. வேலைப்பளு, மன அழுத்தம் என இதற்கான காரணங்கள் விரிந்தாலும், இதை சரிசெய்துகொள்ளக் கூடிய வழிகள் இருக்கின்றன. படியுங்கள்… பின்பற்றுங்கள்!

* இரவு உறங்குவதற்கு முன்பாக பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து மூடிய இமைகளின் மீது 10 முதல் 15 நிமிடங்கள் வைக்கலாம்.

* எலுமிச்சை மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவு எடுத்துக் கலந்து, இரவு உறங்குவதற்கு முன்பு சிறிது நேரம் கருவளையங்களில் பூசி, கழுவிவிட்டுத் தூங்குங்கள். தூக்கம் எனும் தேவதை கண்களைத் தழுவுவாள்.

* உருளைக்கிழங்கை அரைத்து சாறெடுத்து, பஞ்சில் நனைத்து, கண்களைச் சுற்றித் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவ, களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

* வெள்ளரிக்காய் சாறில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம். வெள்ளரிச் சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து மூடிய இமைகளின் மேல் வைக்கலாம். வெள்ளரிக்காயை மெல்லிசாக வட்ட வட்டமாக வெட்டி மூடிய இமைகளின் மேல் வைக்கலாம்.

* கடலை மாவு சருமத்திற்கு சிறந்த வைத்தியப் பொருள். அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பசை போல் குழைத்து, கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால், நாளடைவில் கருவளையம் மறையும், சுருக்கங்களும் நீங்கும்.

* முல்தானி மட்டியையும் பன்னீரையும் கருவளையங்களில் குழைத்துப் பூசலாம்.
மேற்சொன்ன டிப்ஸ் எல்லாம் கருவளையங்களை நீக்கவே. கருவளையங்கள் மீண்டும் வராமல் இருக்க நிம்மதியான மனநிலை, ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் முக்கியம்.

கண்ணாலே காதல் கவிதை சொல்ல, இனி கருவளையம் ஒரு தடையாய் இருக்காதுதானே..?!