Home பெண்கள் தாய்மை நலம் கருக்கலைப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை

கருக்கலைப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை

14

f68c900f-d86c-44e1-ad9f-4b27cf390027_S_secvpfகருத்தரித்து கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சில உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என நமது முன்னோர்கள் மருத்துவ முறைகளில் கூறி சென்றுள்ளனர். அவற்றில் பலவும் கருச்சிதைவு ஏற்படும் என்பதால் தான். கருத்தரித்த ஆரம்பக் கட்டத்தில் மலமிளக்கிகளை உட்கொண்டால் கருக்கலைப்பு ஆகிவிடும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, ஆரம்ப காலக்கட்டத்தில் மலமிளக்கிகள் உட்கொண்டால் கருக்கலைந்துவிடும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். பப்பாளி பழம், கருச்சிதைவு ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ஆதலால் தான் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் கூறுகிறார்கள். சிட்ரஸ் பழங்கள் மற்றும் உடல் சூட்டை அதிகரிக்கும் காய்கறிகள் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்படும்.

ஹை-டோஸ் அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொண்டாலும் கருச்சிதைவு ஏற்படும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் ஏதும் இல்லை. ஆரம்பக் காலக்கட்டத்தில் இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பழுக்காத அன்னாசிப்பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும். உடலில் இது ஏற்படுத்தும் மிகபெரிய சூட்டின் காரணமாக தான் கருச்சிதைவு ஏற்படுகிறது.

– இவை அனைத்தும் கருச்சிதைவு ஏற்பட காரணமானவை. சிலருக்கு இதனால் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு உடல்நலமும் பாதிக்கப்படலாம். எனவே, இவ்வாறு கருச்சிதைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.