Home பெண்கள் தாய்மை நலம் கடுமையான மசக்கையைச் சமாளிக்க சில குறிப்புகள்

கடுமையான மசக்கையைச் சமாளிக்க சில குறிப்புகள்

24

வீட்டிலேயே செய்த கர்ப்பப் பரிசோதனையில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று தெரிந்த நிமிடம் முதலே, உங்களுக்கு பல்வேறு விதமான உணர்வுகள் ஏற்படத் தொடங்கியிருக்கும்! ஏதோ ஒரு புதிய தொடக்கம் உண்டானதுபோலவும், புதிய பொறுப்பு சேர்ந்துள்ளது போலவும் தோன்றும், புதிய ஒரு ஜீவனை வரவேற்க நீங்கள் தயாராவீர்கள். இதெல்லாம் உங்களுக்கு ஓர் அற்புத உணர்வைக் கொடுக்கலாம்!

எனினும், உங்கள் வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருக்கும். சில மாற்றங்கள் உணவுப் பழக்கம் சம்பந்தப்பட்டதாக இருக்கும், உங்கள் மனத்தைக் கவரும் மீன் குழம்பு வாசம் இப்போது உங்களைக் கவராது, மாறாக குமட்டலையே ஏற்படுத்தும்! இதுபோல இன்னும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்!
இதைத்தான் மசக்கை என்பார்கள்! ஆங்கிலத்தில் இதை ‘மார்னிங் சிக்னெஸ்‘ என்பார்கள், ஆனால் காலையில் மட்டுமின்றி இவை அனைத்தும் நாள் முழுதும் இருக்கும்! உங்கள் உடலுக்கு என்ன ஆனது என்று குழப்பமாக உள்ளதா?எல்லாப் பெண்களுக்குமே கர்ப்பமானால் இப்படியெல்லாம் ஆகுமா? என்று கேள்வி எழுகிறதா!

கர்ப்பமாக இருக்கும்போது ஏற்படும் குமட்டல் உணர்வை மசக்கை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை ‘மார்னிங் சிக்னெஸ்’ என்றாலும், இது எந்த நேரத்திலும் ஏற்படக்கூடும்! பொதுவாக, கர்ப்பத்தின் தொடக்க மாதங்களில் மசக்கை இருக்கும், படிப்படியாக அடுத்தடுத்த மாதங்களில் குறையத் தொடங்கும். ஆனால் சிலருக்கு கர்ப்ப காலம் முழுதும் தொடரக்கூடும். மசக்கை குமட்டல் போன்ற அறிகுறிகளை சில வீட்டு வைத்திய முறைகள் தணிக்கக்கூடும். அரிதாக சிலருக்கு இந்த அறிகுறிகள் மிகக் கடுமையாக இருக்கலாம். இதனை ஹைப்பர்மீசிஸ் கிராவிடேரம் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்தப் பிரச்சனையை சமாளிக்க சில குறிப்புகள் (Below are a few tips for managing Hyperemesis Gravidarum)
உங்களுக்கு என்னென்ன அறிகுறிகள் மற்றும் தொந்தரவுகள் உள்ளன என்று உங்கள் மருத்துவரிடம் விளக்கிக் கூறுங்கள். கர்ப்பத்தின்போது லேசானது முதல் மிதமானதுவரை வாந்தி வருவது சகஜம். அதனால் பிரச்சனை இல்லை. மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் அளவிற்கு அதிக வாந்தி இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் செல்வது நல்லது.

பொதுவாக, சமைக்கும்போது, சூடான உணவுப் பொருளின் மணத்தால் குமட்டலும் வாந்தியும் அதிகம் தூண்டப்படும். உங்கள் இணையர், குடும்பத்தினர் அல்லது நண்பத்தினர் இதற்கு உதவலாம்.
சிலவற்றை சாப்பிட வேண்டும் என்று உந்துதல் ஏற்படும். அவற்றை நன்கு கண்காணிக்க வேண்டும், ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது முக்கியம்தான், ஆனால் உங்கள் உடல் எதைக் கேட்கிறதோ அதை சாப்பிட்டால் நன்றாக உணர்வீர்கள். அதுவும் முக்கியம்! எதைச் சாப்பிட முடிகிறதோ, எதைச் சாப்பிட்டால் வாந்தி அல்லது குமட்டல் ஏற்படாமல் இருக்கிறதோ, அதை சாப்பிடுங்கள். சத்துள்ள அவசியமான உணவை பிறகு சேர்த்துக்கொண்டு சரிசெய்துகொள்ளலாம். உங்கள் உடலில் சேமித்துள்ள ஊட்டச்சத்துகளில் இருந்தே, உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை தனக்குத் தேவையான சத்துகளை எடுத்துக்கொள்ளும்! ஆகவே நீங்கள் ஒவ்வொரு வேளையும் தவறாமல் சத்துள்ள உணவையே சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஒரு முறை உங்கள் நாக்கு கேட்கும் சுவையிலான உணவை சாப்பிடலாம், அடுத்த முறை குழந்தைக்காக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். இப்படி ஒரு சமநிலையைப் பராமரிக்க வேண்டும்.
அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது இடைவெளி விட்டு சிறுகச் சிறுகச் சாப்பிட வேண்டும். அவ்வப்போது சிறு தீனி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிக கொழுப்பு கொண்ட உணவுகளைத் தவிர்க்கவும். அதிக புரதமும் நார்ச்சத்துகளும் உள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

நடைப்பயிற்சி, லேசான உடற்பயிற்சி, யோகா என உடலுழைப்பு தினமும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
சுத்தமான காற்றோட்டமுள்ள இடத்தில் ஆழ்ந்து சுவாசிக்கும் பயிற்சிகளைச் செய்யவும்.
சாப்பிட்ட பிறகு உடனடியாக தூங்கச் செல்வதைத் தவிர்க்கவும்.
திரவ ஆகாரம் அதிகம் எடுத்துக்கொள்ளவும். ஆனால் ஒரே சமயத்தில் அதிக அளவு அருந்துவதைத் தவிர்க்கவும். நாள் முழுதும் அவ்வப்போது சிறு சிறு அளவில் திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ளவும்.
புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்கவும்.
தனியாக ஊட்டச்சத்துக்காக இஞ்சியை மருந்து வடிவில் எடுத்துக்கொள்வதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

கூடுமான அளவிற்கு ஓய்வெடுக்கவும், மதியம் சில மணிநேரம் படுத்து ஓய்வெடுக்கவும் வேண்டும். களைப்பு, சோர்வு குமட்டல் மற்றும் வாந்தியை இன்னும் மோசமாக்கும்.