Home பாலியல் ஓரினச்சேர்க்கை ஆசை எப்படி வருகிறது?

ஓரினச்சேர்க்கை ஆசை எப்படி வருகிறது?

298

imagesடாக்டர், நான் ஒரு பள்ளி மாணவன். எனக்கு பெண்களை பார்த்து ஆசை வரவில்லை. மாறாக, ஆண்களை தான் பிடித்திருக்கிறது. ஏன் இந்த ஓரினச்சேர்க்கை (ஹோமோசெக்ஸ்) ஆசை எனக்கு வருகிறது? -நவீன், மற்றும் பல ஆண்கள். 2) டாக்டர் என் பெயர் சவீதா. எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. பேருக்கு நான் என் கணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டாலும் என் மனம் பெண்களைத்தான் நாடுகிறது. இந்த லெஸ்பியன் உணர்வு எப்படி எனக்கு வந்தது? ஹோமோசெக்ஸ் உணர்வு வருவதற்கு என்ன காரணம்?

– சவீதா, மற்றும் இதே போன்ற கேள்வியோடு பல பெண்கள்.

மருத்துவரின் பதில் :

ஏன் ஓரினச்சேர்க்கை உணர்வு வருகிறது என்பது குறித்து இரண்டு வகையான விளக்கங்கள் உள்ளன. அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ பிறக்கும்போதே ஓரினச் சேர்க்கையாளராக பிறக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது ஓரினச் சேர்க்கை ஆசை உடையவர்களின் மூளை பிறக்கும்போதே மற்றவர்களின் மூளையை விட வித்தியாசமாக இருப்பதால், இது போன்ற ஆசை உடையவர்களாக இருக்கிறார்கள். அதே போல, இது போன்றவர்களின் டி. என் ஏ எனும் மூலக்கூற்றிலும் சில மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடித்து உள்ளனர்.

இதற்கு எதிராக, ஓரினச்சேர்க்கையாளர்கள் பிறப்பதில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்று பல விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் நிபுணர்களும் கூறுகிறார்கள். இதற்காக பல சூழ்நிலை காரணங்களை இவர்கள் முன் வைக்கிறார்கள். ஏன் ஆண்கள் ஆண்களை விரும்புபவர்களாக ஆகிறார்கள், ஏன் பெண்கள் பெண்களை புணர விரும்புகிறார்கள் என்பதற்கு சிறு வயதில் ஏற்படும் நிகழ்வுகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக: சிறு வயதிலேயே ஹோமொசெக்சுக்கு பெரியவர்கள் உடன்பட வைத்தல். ஆண் பிள்ளைகள் பெண்களோடு மட்டுமே விளையாடுதல், அல்லது பெண் குழந்தைகள் ஆண்களோடு மட்டுமே விளையாடுதல். விடலைப் பருவத்தில், விளையாட்டாக ஹோமோசெக்ஸ் செய்தல் இது போல மேலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஓரினச்சேர்க்கையை பல நாடுகள் இன்னும் மதம், கலாச்சாரம் போன்ற பெயர்களை சொல்லி தடை செய்து உள்ளன. எந்தெந்த நாடுகள் ஹோமோசெக்ஸை தடை செய்துள்ளன என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம். சில நாடுகளில் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். ஏன், மரண தண்டனை கூட வழங்கப்படுகின்றது. எந்த நாடோ, மதமோ, கலாச்சாரமோ யாருடைய படுக்கை அறையையும் எட்டிப் பார்க்க கூடாது, அது அவரவர் சுதந்திரம் என்பதே என் சொந்தக் கருத்து. இதனால் ஓரினச் சேர்க்கையாளர்களை கண்ணியமாக நடத்துங்கள்.