Home பெண்கள் உடல் கட்டுப்பாடு எந்த காரணங்களுக்காக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கலாம்

எந்த காரணங்களுக்காக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கலாம்

28

27121059-1cc1-4562-aa2a-32c7182660d0_S_secvpfஉடலுக்கு பயிற்சி அவசியம்தான். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக போனால் நோயாகவும் மாறக்கூடும். எனவே எப்போதெல்லாம் உடற்பயிற்சி தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்! உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடல் நலம் சீராகும் வரை ஜிம்முக்குப் போகாதீர்கள். ‘சின்ன தலைவலி, ஜுரம் அல்லது சளி என்றால் கூட உடற்பயிற்சியை நிறுத்துவிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

களைப்பாகவோ டென்ஷனாகவோ உள்ள நேரங்களிலும் உடற்பயிற்சியை அறவே தவிர்க்க வேண்டும். உடலில் காயம் பட்டால் அந்த காயம் ஆறும் வரை உடற்பயிற்சியை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். காயம் நன்றாக குணமடைந்தபிறகு மீண்டும் ஜிம் போகலாம். முதல் நாள் இரவில் அதிகளவில் குடித்திருந்தாலும் மறுநாள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

போதை தெளியாமல் செய்யும் எந்த உடற்பயிற்சியும் பலன் அளிக்காது. தினமும் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். சரியாக தூக்கம் இல்லாதவர்களும் அன்றைய தினம் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சரியான தூக்கம் இல்லாத போது உடல் சோர்வுடன் இருக்கும். அந்த நேரங்களில் நம்மால் சரியாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்த முடியாது.