Home பெண்கள் தாய்மை நலம் எந்தெந்த நேரங்களில் உறவுகொண்டால் குழந்தை உண்டாகும்?…

எந்தெந்த நேரங்களில் உறவுகொண்டால் குழந்தை உண்டாகும்?…

59

தம்பதியருக்கு உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் எப்பொழுது உடலுறவு கொண்டால், குழந்தை உருவாகும். எந்த சமயம் உடலுறவு கொண்டால் அதிக இன்பத்தை பெற இயலும் என்பது போன்ற சந்தேகங்கள் உண்டாவதுண்டு.

பெண்ணின் கருப்பையிலிருந்து மாதமாதம் கருமுட்டை வெளியேறுவது தான் மாதவிலக்காக உண்டாகிறது. அப்படி கருமுட்டை வெளி வருகிற, அதாவது மாதவிலக்கு (ஒவுலேஷன் (Ovulation)) ஏற்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு அல்லது இரண்டு நாட்கள் பின்பு உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும். உடனே கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகம்.

கருமுட்டை வெளியேறும் நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அந்த சமயங்களில் பெண்ணுறுப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், அதிக அளவிலான ஈரமானதாகவும் இருக்கும்.

மார்பகங்கள் மென்மையாகும். வயிறு சுண்டி இழுப்பது போல இருக்கும் (belly cramps),காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (spotting), கணவரின் அருகிலேயே இருக்க வேண்டுமென்று மனதில் தோன்றும். உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும்.

முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் பெண்ணின் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermometer)ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டுபிடிக்கலாம். உடல் வெப்பத்தை சாதாரணமாகவே நீங்கள் உணர முடியும். அக்குள் மற்றும் மார்பின் கீழ்பகுதி தொடைகளில் அதிக சூட்டை உணர முடியும்.

உங்களுக்கு மாதவிலக்கு சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால் கருமுட்டை வெளிப்படும் (Ovulation)நாள் சரியாக 14ஆம் நாள் நடக்கும்.

உதாரணமாக, மாதவிலக்கு சுழற்சி 31 நாள்கள் என்றால், உங்கள் கருமுட்டை வெளிவரும் நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் கருப்பையிலிருந்து கருமுட்டை வெளிப்படும் நாள். இந்த நாளில் நீங்கள் உடலுறவு கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு உணர்வுகள் கிளர்ச்சியடையும் சமயம் உடலுறவு கொள்ள வேண்டும். பெண்களுக்குப் பொதுவாக மதிய வேளையில் உணர்வுகள் அதிகஅளவில் கிளர்ச்சியடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.