Home உறவு-காதல் உறவை மேம்படுத்தும் 6 விஷயங்கள்…

உறவை மேம்படுத்தும் 6 விஷயங்கள்…

14

jiopl-300x200* வெளியில் எங்கேயாவது சென்று விட்டு, துணை வீட்டுக்குள் நுழையும் போது ‘ஹாய்’, ‘ஹலோ’ சொல்லி வரவேற்கலாம். வீட்டை விட்டுக் கிளம்பும் போது ‘பை’ சொல்லி வழியனுப்பலாம். காலையில் எழுந்ததும் ‘குட் மார்னிங்’, இரவில் ‘குட் நைட்’ சொல்லவும் பழகுங்கள்.
* தூங்கும் போது துணையைக் கண்டு கொள்ளாமல் டி.வி. பார்ப்பது, புத்தகம் படிப்பது என இருக்காமல், துணை செய்கிற விஷயங்களைக் கவனியுங்கள். ஒரு சின்ன முத்தத்துடனும் அணைப்புடனும் தூங்கச் செல்வது அன்றைய இரவை மட்டுமல்ல, அடுத்த நாள் விடியலையும் அழகாக்கும்.
* பல் தேய்ப்பதையும் குளிப்பதையும் அன்றாட வேலையாகச் செய்யத் தவறுகிறோமா? அது போல ‘ஐ லவ் யூ’ சொல்வதையும் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் செயற்கையாகத் தெரிந்தாலும் அது ஏற்படுத்துகிற விளைவு மிகப் பெரியது என்பதைப் போகப் போக உணர்வீர்கள்.
* துணையின் தவறுகளை, குறைகளைக் கண்டுபிடிப்பதும் மட்டம் தட்டுவதும் யாருக்குமே சுலபமான விஷயம்தான். ஒரு மாறுதலுக்கு அதைத் தவிர்த்து, துணையின் நிறைகளை, தாராள மனப்பான்மையை, அன்பை, பாசத்தை, இரக்கத்தைக் கவனித்து, அவை பற்றி நான்கு வார்த்தைகள் நல்லவிதமாகச் சொல்லிப் பாருங்களேன்…
* துணை செய்கிற சின்னச் சின்ன விஷயங்களைக் கூடப் பாராட்டப் பழகுங்கள். அது அவரது உடை, புதிய ஹேர் ஸ்டைல், மேக்கப் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். துணை செய்த ஓர் உதவி உங்களை நெகிழ வைத்ததா? அதையும் வாயார பாராட்டுங்கள்.
* உங்கள் பார்வையைக் கொஞ்சம் மாற்றுங்கள். கண்ணுக்குத் தெரிகிற விஷயங்களை மட்டுமே கவனிப்பது, கமென்ட் சொல்வது என்பதை மாற்றி, கண்ணுக்குத் தெரியாத துணையின் நல்ல தன்மைகளையும் கவனிக்கத் தொடங்குங்கள். கவனிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதை வெளிப்படையாகச் சொல்லிப் பாராட்டுங்கள். இந்த விதிகள் அனைத்தும் கணவன்-மனைவிக்கிடையே மட்டுமல்ல, எப்படிப்பட்ட உறவுகளிடமும் இடைவெளி அதிகரிக்காமல் காப்பாற்றும்.