Home பாலியல் உடல் ரீதியான நெருக்கத்தைப் பற்றிய தகவல்கள்!

உடல் ரீதியான நெருக்கத்தைப் பற்றிய தகவல்கள்!

26

Couple-Conception--350x250உடலுறவு என்பதை இயற்கையான நிகழ்வு என நினைத்து வந்துள்ளீர்களா? சரி, அப்படியானால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் சில உள்ளன. உடலுறவு என்பது முழுமையாக விஞ்ஞான பூர்வமான ஒன்று என உலகத்தில் உள்ள பல்வேறு விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். ஒளிச்சேர்க்கை கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தை போன்றது தான் இது.

இரண்டு நபர்களுக்கு மத்தியிலான உடலுறவைப் பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல்கள் கண்டிப்பாக உங்களை முழுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

சிலருக்கு அளவுக்கு அதிகமாக உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் ஆம்! ஆனால் இது அளவுக்கு அதிகமாக செக்ஸ் வெறியை கொண்டிருக்கும் நிம்ஃபோமானியாக் பிரச்சனை கிடையாது. ஆனால் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் லாஸ் ஏஞ்செல்ஸ் ஆய்வு ஒன்றின் படி, தனிப்பட்ட நபரின் மூளை, அவரை பல்வேறு நபர்களுடன் உடலுறவு வைக்கச் சொல்லி தூண்டும். தன்னார்வமுடையவர்களின் மூளையை ஸ்கேன் செய்த போது ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்தனர். அப்படி எடுக்கும் வேளையில், அவர்கள் ஆபாசம் கலந்த படங்களைப் பார்க்க பரிந்துரைக்கப்பட்டனர். அதன் பின் கடந்த காலத்தில் தங்களுடைய செக்ஸ் நடத்தைகளைப் பற்றி யோசிக்க கூறப்பட்டார்கள். ஆபாச படங்களைக் காணும் போது மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டவர்களுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட செக்ஸ் துணைகள் இருந்திருக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

குறைவான கொலஸ்ட்ரால் செக்ஸ் செயலாற்றுகையை மேம்படுத்தும் நீங்கள் படுக்கையில் சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்கள் கொலஸ்ட்ரால் அளவை உங்கள் மருத்துவரிடம் சென்று சோதித்து கொள்ளுங்கள். கேட்பதற்கு விந்தையாக இருக்கலாம். ஆனால் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது விறைப்பு செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும். மேலும், ரட்கர்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த ராபர்ட் வுட் ஜான்சன் மெடிக்கல் ஸ்கூல் நடத்திய ஒரு ஆய்வின் படி, கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்காக மருந்து உட்கொள்பவர்கள் நாளடைவில் சிறந்த செக்ஸ் அனுபவத்தைப் பெறலாம்.

உடலுறவிற்கு பின் கட்டித் தழுவவில்லை என்றால் உங்கள் துணையை திருப்திப்படுத்த முடியாது பெண்கள் இதனை காலம் காலமாக எதிர்ப்பார்க்கிறார்கள். அதிரடியான ஒரு படுக்கை அனுபவத்திற்கு பிறகு, தங்கள் துணையை கட்டித் தழுவி கொள்ள ஆண்கள் கடைசியாக ஒத்துக் கொள்வார்கள். இதற்கெல்லாம் நாம் டொரோண்டோ பல்கலைகழகத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். உடலுறவு அளவிற்கு தங்கள் உறவை திருப்திப்படுத்த உடலுறவிற்கு பின் கட்டித் தழுவுவது மிகவும் முக்கியம் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்கள். இந்த திருப்திக்கு காரணமாக இருப்பது உடலில் இருந்து ஆக்சிடாக்சின் வெளியேறுவதாலேயே. ஒரு ஜோடி கட்டித் தழுவிக் கொள்ளும் போது இது உற்பத்தியாகிறது.

உணர்ச்சிகளை எழுப்பி விடுங்கள், இனியும் உடலுறவு குளறுபடியாகாது உடலுறவு என்பது சற்று குளறுபடியான ஒரு செயல் தானே? ஆம், நீங்கள் உணர்ச்சியில் இல்லாத போது அப்படி தான் தோன்றும். அதற்கு காரணம், செக்ஸ் ரீதியான உணர்ச்சி தூண்டுதல் உடலின் இயற்கையான வெறுப்பு எதிர் செய்கையை புறக்கணிக்க செய்யும். அதனால் இந்த செயலை நீங்கள் அனுபவிக்கும் வரை அதை ஒரு தொந்தரவாக நினைக்க மாட்டீர்கள். நெதர்லாண்ட்டில் உள்ள க்ரொனிங்கென் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு ஆய்வின் படி, பெண்கள் குழு ஒன்றை ஆபாச திரைப்படத்தை அல்லது, ஸ்போர்ட்ஸ் வீடியோவை அல்லது நடுநிலையான ஒரு ரயில் வீடியோவை பார்க்க செய்யும் போது, சில விரும்பத்தகாத தொடர் செயல்களை (பூச்சி விழுந்துள்ள பானத்தை குடிப்பது போன்றவை) செய்ய சொல்லப்பட்டுள்ளார்கள். செக்ஸ் படத்தை பார்த்தவர்கள் இந்த செயல்களை குறைவான அளவில் அருவருப்பான வகையில் உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் மற்றவர்களை காட்டிலும் அவர்கள் இத்தகைய செயல்களை வேகமாக செய்துள்ளார்கள்.

செக்ஸ் கலோரிகளை குறைக்கும். இதோ அதற்கான ஆதாரம்! செக்ஸைப் பற்றி பொதுவாக கூறப்படுபவை இது. ஆனால் இதனை அரிதாகவே மக்கள் நம்பி வந்தனர். ஆனால் இது உண்மை என நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. க்யூபெக் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு ஆய்வின் படி, படுக்கைகளில் ஒரு மணிநேரம் பிஸியாக செயல்பட்டால், 30 நிமிடம் ஜாக்கிங் செய்யும் அளவிற்கு கலோரிகள் குறையுமாம். இந்த ஆய்வின் படி, உடலுறவின் போது ஆண்கள் ஒரு நிமிடத்திற்கு 4.2 கலோரிகளை குறைக்கின்றனர். பெண்களோ ஒரு நிமிடத்திற்கு 3.1 கலோரிகளை குறைக்கின்றனர். மொத்தத்தில், ஒரு முறை உறவு கொள்ளும் போது ஒரு ஆண் 101 கலோரிகளையும், ஒரு பெண் 69 கலோரிகளையும், குறைக்கிறார்கள்.