Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் உடற்பயிற்சி

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் உடற்பயிற்சி

21

13-1376373189-1-weightlossஉடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். தினமும் 30 நடைப்பயிற்சி செய்தால் 30 வயதில் வரும் சர்க்கரை நோய் மற்றும் இதய நோயைக் கட்டுப்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யோகா செய்வதும் உடல் எடையைக் குறைப்பதுடன் மனஅழுத்தத்தையும் போக்க உதவும்.

பெண்கள் பிரசவத்திற்கு பின் 5 மாதம் கழித்து சில எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டிவிடும்.

எனவே எந்த உடற்பயிற்சியும் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதே உடற்பயிற்சி அளவுக்கு அதிகமாகாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது. உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் தினமும் உடற்பயிற்சிக்காக 30 நிமிடத்தை ஒழுக்க வேண்டும்.