Home பாலியல் உடலில் செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிப்பது எப்படி?

உடலில் செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிப்பது எப்படி?

34

downloadஉடலில் ஹார்மோன்களின் அளவை சீராக பராமரிப்பது என்பது மிகவும் முக்கியம். இதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
தற்போது பல ஆண்கள் மற்றும் பெண்கள் பாலுறவில் சிறப்பாக ஈடுபட முடியாமல் உள்ளனர். இதற்கு காரணம் மன அழுத்தத்தினால், பாலுணர்ச்சியை அதிகரிக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படுவது தான்.
எனவே இந்த செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்க மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, தூக்கமின்மை, மோசமான டயட், உடல் உழைப்பு இல்லாமை போன்றவற்றை சரிசெய்ய வேண்டும்.
* தினமும் இரவில் படுக்கும் முன் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மனம் அமைதி பெற்று, மன அழுத்தம் குறையும். அதிலும் ஒரு டம்ளர் பாலில், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வர, செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் குறையும்.
* பெண்களின் செக்ஸ் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனை அதிகரிக்கும் உணவுகளான ஆலிவ் ஆயில், பட்டாணி, ஆளி விதை, பூண்டு, பீட்ரூட், சூரியகாந்தி விதை போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். இதனால் செக்ஸ் ஹார்மோன் குறைவதைத் தடுக்கலாம்.
* நீங்கள் அடிக்கடி கண்ட மாத்திரைகளை எடுத்து வந்தால், அதனால் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும். எனவே எந்த ஒரு பிரச்சனைக்கும் சுய மருத்துவம் பார்ப்பதைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் எடுக்கும் கண்ட மருந்துகளால், உங்கள் பாலியல் வாழ்க்கை தான் பாதிக்கப்படும்.
Share !