Home பாலியல் உச்சநிலையின் போது தலைவலியா? இது கூட காரணமாக இருக்கலாம்!

உச்சநிலையின் போது தலைவலியா? இது கூட காரணமாக இருக்கலாம்!

52

சில பெண்கள் போலியாக எனக்கு தலைவலிக்கிறது என்று உடலுறவு கொள்வதை நிறுத்துவார்கள். ஆனால் உண்மையிலேயே உடலுறவில் உச்சம் கண்ட உடனேயே சிலருக்கு தலைவலி வரும். இது ஆண், பெண் என இருவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். நீங்கள் இந்த வகையான தலைவலியை பற்றி கூடுதலாக சில விஷயங்களை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

தலைவலி ஆண், பெண் இருவரும் தங்களது உடலுறவில் முழுமையான இன்பம் பெற்று, உச்சமடைதல் மற்றும் உடலுறவு சார்ந்த ஆர்வம் காரணமாக உண்டாகும் தலைவலி தான் முதன்மை பாலியல் தலைவலி எனப்படுகிறது.

காரணம் என்ன? இந்த முதன்மை பாலியல் தலைவலி என்பது எதனால் உண்டாகிறது என்பது பற்றி உறுதியாக இன்னும் யாராலும் கூற முடியவில்லை. இருப்பினும், இது உடற்பயிற்சி மற்றும் அதிக வேலைப்பழு காரணமாக உண்டாகிறது என்று யூகிக்கப்படுகிறது.

ஒற்றைத்தலைவலி உடலுறவின் போது அதிக இரத்த ஓட்டம் தலைக்கு செல்வதாலும், தலையில் அழுத்தம் அதிகரிப்பதாலும் கூட இந்த தலைவலி உண்டாகலாம். அல்லது உங்களுக்கு ஒற்றைத்தலைவலி இருந்தாலும் கூட இது போன்று உச்சம் காணும் போது தலைவலி உண்டாகும்.

ஒற்றைத்தலைவலி உடலுறவின் போது அதிக இரத்த ஓட்டம் தலைக்கு செல்வதாலும், தலையில் அழுத்தம் அதிகரிப்பதாலும் கூட இந்த தலைவலி உண்டாகலாம். அல்லது உங்களுக்கு ஒற்றைத்தலைவலி இருந்தாலும் கூட இது போன்று உச்சம் காணும் போது தலைவலி உண்டாகும்.

வேறு சில காரணங்கள் உடல் எடை அதிகமாக இருப்பது, மண்டியிடும் நிலை, உடலுறவுக்கான ஆர்வம் எந்த கோணத்தில் உள்ளது, மன அழுத்தம் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தான் இந்த தலைவலி அமையும்.

லேசான வலி உடலுறவுக்கு பின்னர் தலை அல்லது கழுத்து பகுதியில் இலேசாக வலிக்கும். அல்லது, உச்சம் கண்ட உடனேயே வலி வந்துவிடும். ஆனால் சில நிமிடங்களில் அது சரியாகிவிடும். ஆனால் இதே தலைவலி நீங்கள் படுத்து உறங்கி காலையில் எழுந்து உடலுறவு கொள்ளும் போதும் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.