Home உறவு-காதல் உங்களுடையது உண்மையான காதலா என தெரிந்துகொள்ள இத படிங்க!

உங்களுடையது உண்மையான காதலா என தெரிந்துகொள்ள இத படிங்க!

29

இங்கு உண்மையான காதலுக்கும் இணைப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்களது துணையுடன் உண்மையான காதலில் இருக்கிறீர்களா? அல்லது இது வெறும் இணைப்பு மட்டும் தானா? காதலை புரிந்து கொள்வது சற்று கடினம் தான், ஆனால் இந்த கட்டுரை உங்களுக்கு உண்மையான காதலை புரிய வைக்கும்.

தகவல்கள்

மேலும், உங்களது தற்போதைய காதலை வலிமையாக்க அல்லது வருங்காலத்தில் வரும் காதலை உண்மையாக்க உதவும் என நம்புகிறேன்.

காதல் தன்னலமற்றது, இணைப்பு சுயநலமானது

நீங்கள் ஒருவர் மீது உண்மையான காதலில் இருந்தால், அவரை எப்போதும் மகிழ்சியாக வைத்துக்கொள்ள நினைப்பிர்கள். பாத்திரங்களை யார் கழுவுவது போன்ற சண்டைகளில் வெற்றி பெற நினைக்கமாட்டீர்கள்.

உணர்வுபூர்வமாக உங்கள் துணையை ப்ளாக்மெயில் போன்றவற்றால் கட்டுப்படுத்த நினைக்கமாட்டீர்கள். நீங்கள் ஒருவரிடம் வெறுமனே இணைந்திருக்கும்போது, அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் நினைப்பீர்கள். அவர்கள் உங்களை கண்டுகொள்ளவில்லை எனவும், நீங்கள் கைவிடப்படுவதாகவும் தோன்றும். உங்களது துணையை கட்டுப்படுத்த முயலுவிர்கள்.

காதல் சுதந்திரமானது, இணைப்பு கட்டுப்படுத்துவது

பரஸ்பர காதல் உங்கள் உண்மையான நிலையை வெளிக்காட்ட உதவுகிறது. உங்களது பலவீனங்களை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. பரஸ்பர காதல் இருவரையும் வளர்ச்சியடைய வைக்கிறது. உங்களது குறைகளையும் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளும் துணை கிடைப்பது உங்களது அதிஷ்டம். இருவரும் ஒருவருக்கொருவர் ஊக்குவித்துக்கொள்வதால், உங்களுடைய இலக்கை அடைய காதல் சுதந்திரமளிக்கிறது.

மறுபுறம் இணைப்பு உங்களை சுதந்திரமாக இருக்கவிடாது. நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, விளையாடுவது என அனைத்தையும் தடுக்கும். இது ஒரு ஆரோக்கியமற்ற உறவுமுறை ஆகும். உங்களது துணை தன்னுடைய கனவுகளை கட்டுப்படுத்திக்கொண்டு விருப்பம் இல்லாமல், எந்த நேரமும் உங்களடனே இருக்க வேண்டும் என நினைப்பது காதல் அல்ல.

காதல் வளர செய்யும், இணைப்பு உருகுழைக்கும்

நீங்கள் உண்மையான காதலில் இருந்தால், நீங்கள் உங்கள் துணையுடன் இணைந்து வளர முடியும். உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் மிகச்சிறந்த திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும். சுருக்கமாக சொல்லப்போனால், உங்கள் துணை உங்களது வளர்ச்சிக்கு துணையாக இருப்பார்.

நீங்களும் அதே போல அவரது வளர்ச்சிக்கு துணையாக இருப்பீர்கள். வெறும் இணைப்பு மட்டும் இருப்பதனால், உங்களது இயலாமை, வளர்ச்சியின்மை ஆகிய உங்களது சொந்த பிரச்சனைகளின் காரணமாக உங்களது துணையை கட்டுப்படுத்த நினைக்கிறீர்கள். தனது இயலாமையை தனது துணையிடம் சொன்னால், தூக்கி எரியப்படுவமோ என்ற மனபாங்கு, உங்களது வளர்ச்சி மற்றும் உங்கள் துணையுடைய வளர்ச்சி இரண்டிற்குமே தடையாகிறது.

காதல் நிலையானது, இணைப்பு தற்காலிகமானது

காதல் காலம் கடந்து வாழ்வது. ஒருவேளை உங்களது துணையுடன் உண்டான கருத்து வேறுபாட்டால், உங்களது பிரிவு தற்காலிகமானதாகவோ அல்லது நீண்ட காலமானதாகவோ இருக்கலாம். உங்கள் இருவரின் காதல் உண்மையானதாக இருந்தால், உங்களது துணையின் மனதில் உங்களுக்கான இடம் கட்டாயம் இருக்கும்.

மனைவி, கணவனிடம், எதிர்பார்க்கும், 37 விஷயங்கள், huspend, wife, love

மறுபுறம், நீங்கள் அவர்களிடம் வெறுமனே இணைந்திருந்தால், நீங்கள் பிரிந்துவிட்ட பிறகு சீற்றம் அடைவீர்கள். நீங்கள் துரோகத்தின் உணர்வை அனுபவிக்கலாம். உங்களுடைய துணை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் பொறுப்பைக் கொண்டிருப்பதாகக் கருதுவதால் இந்த உணர்வுகள் உண்டாகின்றன. இது கண்கள் மட்டுமே சம்மந்தப்பட்டதாக இருக்கும்.

காதல் ஈகோவை குறைக்கும், இணைப்பு ஈகோவை அதிகரிக்கும்

நீங்கள் காதல் உறவில் இருக்கும் போது, நீங்கள் சுயநலமாக சிந்திப்பது குறைகிறது. உங்கள் ஈகோவை குறைக்க உங்கள் உறவு உதவுகிறது. உங்கள் வளர்சியை ஊக்குவிக்கிறது. உங்கள் துணையுடன் நீங்கள் உங்களது குறை என நினைக்கும் விஷயத்தைக்கூட பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஈகோ அற்ற உறவு முக்கியமாக தங்களது குறைகளை பகிர்ந்து கொள்ளவும் அதிலிருந்து மீளவும் உதவுகிறது.

இதயத்தோடு தொடர்பு கொண்டு உறவில் தைரியத்தை உண்டாக்குகிறது.
மாறக இணைப்பு அடிப்படையிலான உறவுகள் ஈகோவை கொண்டுள்ளன. பலர் இதனால் அதிருப்தி அடைகின்றனர். இதனால் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் போகிறது. இது துணையை அதிகமாக சார்ந்திருக்க வைக்கிறது.

அவர் இல்லையென்றால் மகிழ்ச்சியே இல்லை என்ற நிலை உருவாகிறது. உங்களது பிரச்சனைகளை தீர்க்க குறிப்பிட்ட ஒருவரை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அது உங்களது பிரச்சனையை தீர்க்க உதவாவிட்டாலும் குறைந்த பட்சம் மறக்க உதவுகிறது.

உங்களுடையது இணைப்பாக இருந்தால், அதை காதலாக மாற்றுங்கள். உங்கள் துணையுடன் காதலுடன் இருங்கள். காதலில் இல்லாதவர்கள் ஒரு நல்ல காதலன் / காதலியாக இருக்க உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கான துணை உங்களை தேடி வரும் வரை காத்திருந்து அவரை காதலிக்க தொடங்குங்கள்.