Home உறவு-காதல் இல்லற உறவின் ஆரம்பத்தில் ஏற்படும் சில விசித்திர செயல்கள்

இல்லற உறவின் ஆரம்பத்தில் ஏற்படும் சில விசித்திர செயல்கள்

34

21-1432191233-7ightthingsallcouplesdothatseemweird (1)காதலித்து திருமணம் செய்தவர்களாக இருந்தாலும் (எல்லை தாண்டாமல்), நிச்சயித்து திருமணம் செய்தவர்களாக இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் நுழைந்தவுடன் அந்த புது வாழ்வியல் சூழலில் சில பல விசித்திர செயல்களில் ஈடுபட துவங்குவார்கள்.

அதிலும் தனிக் குடித்தனம் என்றால் கேட்கவே வேண்டாம். லூட்டிகள், குறும்புகள், அதீத பாசம், அக்கறை என எல்லாமே கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ்ஜாக தான் இருக்கும். வீடு, ரோடு என்று வேறுபாடு இல்லாமல் இவர்கள் செய்யும் செயல்கள் சிலரை புல்லரிக்க வைக்கும், சிலரை முகத்தில் அறைய வைக்கும்.

புதியதாய் திருமணம் செய்து இல்வாழ்க்கையில் உட்புகுந்த தம்பதிகள் செய்யும் சில விசித்திரமான விஷயங்கள் குறித்து இனிக் காணலாம்…

ஒரே மாதிரி உடை உடுத்துவது

ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புவதை வெளிப்படுத்துகிறோம் என்று, ஒரே மாதிரி உடை, ஒரே நிறத்தில் உடை என்று உடுத்தி உறவுக்காரர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என்று அனைவர் முன்னிலையிலும் நன்கு தெரியும்படி உலா வருவார்கள்.

ஒளிவுமறைவற்ற வாழ்க்கை

எந்த விஷயங்களாக இருந்தாலும் அதை இருவருக்குள் பொதுவாய் வைத்து பாதுகாக்க தொடங்குவார்கள். இருவருக்குள்ளும் கூச்சம் அறுபட்டு நிற்கும். எதையும் மறைக்க மாட்டார்கள்.

ஆடலும், பாடலும்

புதியதாய் திருமணமான தம்பதிகள் தங்களை ஓர் புதுப்பட நட்சத்திரங்கள் போல பாவித்துக் கொள்வது என்பது 1980-களில் இருந்து நடந்து வரும் கூத்து. டி.வி, ரோடியோ போன்றவற்றில் பாடல்கள் ஒளிக்கும்/ ஒலிக்கும் போது நடனமாடுவதும், பாடுவதும் ஓர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.

செல்ல பிராணிகள்

இப்போது நடைமுறையில், திருமணத்திற்கு பிறகு (அதிலும் “3” படத்திற்கு பிறகு) செல்ல பிராணிகளை வளர்ப்பதும், பரிசளிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

டமால் டுமீல் கூட பிரச்சனை இல்லை

சாதரணமாகவே, டமால், டுமீல் என்று பாம் போட்டால், இடமே நாறிவிடும். ஆனால், தம்பதிகளுக்குள் இது எந்த பிரச்சனையையும் ஏற்படுத்துவது இல்லையாம்.

ரகசிய பாஷை

பொது இடங்களில் தாங்கள் மட்டும் புரிந்துக் கொள்ளும் வகையில் ரகசிய பாஷை, வார்த்தைகள் வைத்திருப்பார்கள்.

மலரும் நினைவுகள்

தங்களது சிறுவயது நினைவுகளை எல்லாம் நினைவுக் கூர்ந்து, மொத்தத்தையும் ஓரிரு வாரங்களில் கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.

சலுப்பே இருக்காது

பேசியதையே, திரும்ப திரும்ப பேசினாலும், அலுப்பும், சலுப்பும் இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.