Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஆரோக்கியம் தரும் ஏரோபிக் உடற்பயிற்சி

ஆரோக்கியம் தரும் ஏரோபிக் உடற்பயிற்சி

23

ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய ஏரோபிக் உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும். மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்.

மலச்சிக்கலைத் தவிர்க்கும். சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும். இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.

இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும்.

இடைத்தூர, நெடுந்தூர ஓட்டம், மெல்லோட்டம், நீச்சல், சைக்கிளோட்டம், நடை, டென்னிஸ், நடனம் போன்ற உடற்பயிற்சிகள் ஏரோபிக் வகை பயிற்சிகளாகும்.