Home பாலியல் ஆண், பெண் இச்சையின்மை எதனால் ?

ஆண், பெண் இச்சையின்மை எதனால் ?

19

1280x720-jg3பல சமயங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இல்லாமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனும் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் செக்ஸ் ஆர்வமும் குறையும். இதர காரணங்கள் – வயது, கர்ப்பமாதல், சில மருந்துகள், டிப்ரெஷன் மற்றும் பரபரப்பு (anxiety).

செக்ஸ் ஆசை மூளையில் உதயமாகிறது. மூளையின் கட்டளைப்படி, ஆண் உறுப்பு இயங்கும். சில மருத்துவ நிபுணர்கள் சொல்வது நைட்ரிக் ஆக்ஸைட் என்பது ஒரு மூளைக்கு செய்தி அனுப்பும் நரம்பு சம்மந்தப்பட்ட ரசாயனம். இதன் குறைபாடு ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைய காரணம்.
அறிகுறிகள்
• செக்ஸில் ஆர்வம் இல்லாமை
• உடலுறவு சந்தர்ப்பங்களை தவிர்ப்பது.
• இரு உடலுறவுக்கு நடுவே நிறைய நாட்கள் ‘இடைவெளி’ விடுவது.
• பாலுணர்வு கனவுகள் குறைதல்
• சுய இன்பம் பெறுவதிலும் நாட்டம் இல்லாமல் போதல்
இதற்கான ஆயுர்வேத மூலிகைகள், அஸ்வகந்தா, பூனைக்காலி, கோக்சூர் (நெரிஞ்சி) சலேப் (Orchis Latifolia), வெள்ளை முஸ்லி, ஆமணக்கு போன்றவை இவை பயனளிக்கும் மூலிகைகள்.