Home பெண்கள் தாய்மை நலம் ஆண்கள் கருவாக்கப் பிரச்னைகள், தீர்வுகள்

ஆண்கள் கருவாக்கப் பிரச்னைகள், தீர்வுகள்

23

ஆண்கள் கருவாக்கப் பிரச்னைகள், தீர்வுகள்
ஆண்கள் – குழந்தைப் பேறின்மை
அடர்த்தி குறைவான விந்து
இனப்பெருக்கத் திறனுக்கு விந்துவின் கொள்ளளவு முக்கியம். அளவு குறைவாக, சுமார் ஒரு மில்லி லிட்டருக்கும் குறைவாக இருந்தால், உங்கள் மனைவியின் கருப்பை வாய்ப்பகுதியை அடைவதற்குப் போதுமானதாக இருக்காது.
பெண் உறுப்பில் அமிலச் சுரப்பு இருக்கும். ஏதேனும் நச்சுகள் நுழைந்தால் அவை கொன்றுவிடும். நீங்கள் குறைவாக விந்தை வெளியேற்றும்போது, அந்த அமிலத்தைச் சமாளிப்பதற்குப் போதுமானதாக அந்த திரவம் இல்லாததால், உயிரணுக்கள் அனைத்தும் கொல்லப்பட்டுவிடும். இந்தத் தகவல் பலருக்குத் தெரியவில்லை என்பதால்தான், கருவாக்கத்துக்கு வரும்போதே இதைப்பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லிவிடுகிறோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு தம்பதியினர் சிகிச்சைக்கு வந்தார்கள். கணவரைப் பரிசோதித்தபோது அவருக்கு விந்தின் அளவு குறைவாக இருந்தது. விந்துப் பெருங்குழாயில் நிறைய திரவம் உற்பத்தி ஆகும் நிலையிலும், குறைவாக வருவது தெரிந்தது.

விந்துத் திரவத்தில் ஃப்ரக்டோஸ் சர்க்கரை நிறைய உற்பத்தியாகி இருக்கிறது என்றால், அவருக்கு ஏதேனும் நோய்த்தொற்று அல்லது அடைப்பு இருக்கலாம் என்று சந்தேகித்தேன். மீண்டும் பரிசோதித்தபோது, நோய்த் தொற்றுகள் இருந்தன. ஆண்டிபயாட்டிக் மருந்துகள் கொடுத்து, திரும்பத் திருப்ப சோதித்த பிறகுதான் சர்க்கரையின் அளவு பாதியாகக் குறைந்தது. நிறைய உற்பத்தியான திரவத்தின் அளவும் சரியான அளவுக்குக் குறைந்தது. பிறகு, அந்தத் திரவத்தை எடுத்து செயற்கை முறையில் விந்தேற்றம் செய்து கருவாக்கம் செய்தேன்.
அதிக விந்து அடர்த்தி
நீங்கள் ஒருமுறை வெளியேற்றும் விந்தின் அளவு மூன்றரை மில்லி லிட்டருக்கும் அதிகமாக இருந்தால், உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். காரணம், விந்துத் திரவத்தில் உயிரணுக்கள் சிதைந்துவிடும். 90 சதவீதம், ஆண்கள் முதலில் வெளியேற்றும் விந்தில் நிறைய உயிரணுக்கள் இருக்கும். ஆகவே, விந்தை சுய இன்பத்தின் மூலம் வெளியேற்றுங்கள். அதைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி கருவாக்கம் செய்யமுடியும்.
செமன் விஸ்கோசிடி (விந்து நீர்மை)
விந்துவின் நீர்மைத் தன்மைகூட கருவாக்கத் திறனைப் பாதிக்கும். வெளியான ஒரு மணி நேரத்துக்குள், உயிரணு நீர்த்துப்போகாவிட்டால், பாலாடைக் கட்டிபோல் உறைந்து ஒட்டிக்கொண்டிருக்கும். கருவாக்கச் சிகிச்சைக்காக வந்தவர்களுள் ஒரு நபரைப் பரிசோதித்ததில், அவருடைய விந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்படியே வெண்ணெய்போல் திரண்டிருந்தது. நீர்க்கவில்லை.

இதைப் பரிசோதித்ததில், விந்தில் உள்ள உயிரணுக்கள் ஒன்றோடு ஓன்று ஒட்டிக்கொண்டு கிடந்ததே தவிர, விந்துத் திரவத்தைப் பயன்படுத்தி அவற்றால் நகரக்கூட முடியவில்லை.
இந்தப் பிரச்னைக்காக, ப்ராஸ்டேட் சுரப்பியைப் பரிசோதித்த போது, அவருடைய ப்ராஸ்டேட் வீங்கியிருந்தது. அந்தப் பகுதியைத் தொட்டதுமே, அவர் வலியால் துடித்தார்.
விந்துத் திரவத்தை நீர்க்கச்செய்யும் ரசாயனப் பொருள் சுரப்பதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்தச் சிக்கல் என்பதைப் புரிந்துகொண்ட நான், ஆன்டிபயாடிக் சிகிச்சை அளித்து, வீக்கத்தைக் குறைத்தேன். அதன்பிறகு, அவருக்கு விந்துத் திரவம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. குறிப்பிட்ட அளவுவரை விந்துத் திரவம் நீர்த்திருப்பதும், கெட்டியாக இருப்பதும் அவசியம். இது கூடினாலும் குறைந்தாலும் பிரச்னைதான்.
செயற்கை முறையில் விந்தேற்றம் செய்யும்போது, விந்துத் திரவத்தில் இருந்து உயிரணுக்களைப் பிரித்தெடுத்து, வேறு திரவத்தைக் கலந்துதான் உள்ளே அனுப்புவோம்.