Home அந்தரங்கம் ஆசைத் தீ’ அணைகிறதே…!

ஆசைத் தீ’ அணைகிறதே…!

20

antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videosசெக்ஸ் பற்றிய அறிவும், அதற்கான வசதி வாய்ப்புகளும் வளர்ந்திருக்கும் இன்றைய நிலையிலும் நிறைய தம்பதிகள் மனதில் திருப்தியின்மையை உணருகிறார்கள், அதை தயங்கித் தயங்கி வெளிப்படுத்துகிறார்கள் என்கின்றனர் பாலியல் நிபுணர்கள்.
படுக்கையறை வில்லன்கள் என்னென்ன? அவற்றைத் துரத்துவது எப்படி? தொடர்ந்து படியுங்கள்…

பிழை – சரி
* தொழில்நுட்ப சாதனங்களின் ஆக்கிரமிப்பு
உங்கள் படுக்கை, தொழில்நுட்ப சாதனங்களின் ஆக்கிரமிப்புக் களமாக மாறிவருகிறதா? அதாவது, லேப்டாப்கள், செல்போன்கள், ஐ பாடுகள் போன்றவை நேற்றைய செய்தித்தாள்கள், ஆவணங்களுடன் `துண்டு’ போட்டுக் கொண்டால் செக்ஸுக்கு இடம் ஏது?

தீர்வு : நவீன தொழில்நுட்ப சாதனங்களை படுக்கையறை பக்கம் கொண்டு போகா தீர்கள். அதற்குப் பதிலாக, அழகான ஓவியங்கள் படுக்கையறைச் சுவர்களை அலங்கரிக்கட்டும். இதமான விளக்கு வெளிச்சம் இருக்கட்டும். நல்ல படுக்கை விரிப்பும், பல குட்டிக் குட்டித் தலையணைகளும் இடம்பிடித்திருக்கட்டும்.

பிழை – சரி

* தொப்பை
தொந்தியும் தொப்பையுமாக சதை வழிந்தால் உடம்பின் எந்தப் பகுதியையும் காட்டுவதற்கு ஆர்வம் பிறக்காது. போர்வைக்குள் புகத்தான் தோணும்.

தீர்வு : தீவிரமான உடற்பயிற்சிகளில் அல்லது `அட்ரினலின்’ சுரப்பை அதிகரிக்கச் செய்யும் டென்னிஸ், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டு களில் ஈடுபடுங்கள். அது உங்களின் உடம்பை கச்சிதமாக வைக்கும். செக்ஸ் ஆர்வத்தையும் தூண்டும்.பிழை – சரி

* மாத்திரைகள் `சாப்பிடுவது’
இன்று பலர், எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு மாத்திரையைப் போட்டுக் கொள்கிறார்கள். மனஅழுத்தம், நெருக்கடி, அசிடிட்டி, கொலஸ்ட்ரால் இவை போன்ற எல்லாவற்றுக்கும் மாத்திரை, தவிர, கர்ப்பத் தடைக்கும் மாத்திரை போட்டுக் கொள்வது, அதை தொடர்ச்சியாகச் செய்வது உங்களின் செக்ஸ் வாழ்க்கையைப் பாதிக்கும்.

தீர்வு : உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட மேம்பட நீங்கள் `சாப்பிடுமë’ மாத்திரை களின் எண்ணிக்கை குறையும். தவிர, ஒவ்வொரு முறை நீங்கள் புதிதாக மாத்திரை சாப்பிடும்போதெல்லாம் உங்களின் குடும்ப மருத்துவரிடம், அது செக்ஸை பாதிக்குமா என்று கேட்டுவிட்டே சாப்பிடுங்கள்.

* புகையும் பிரச்சினைகள்
கணவன்- மனைவிக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்சினை ஏதாவது இருந்தால் அதற்கு முதலில் பலியாவது படுக்கையறை உறவுதான் என்கின்றனர், செக்சாலஜிஸ்ட்கள். அதை நீங்களே கூட அறியாமல் இருக்கலாம்.

தீர்வு : மனம் விட்டுப் பேசுவதை விட சிறந்த தீர்வு இல்லை. ஆனால் சண்டைகள் அடிக்கடி ஏற்படுகின்றன, பேசுவதால் ஒன்றும் பயனில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் சரியான ஆலோசனையை நாடலாம். ஒரு நல்ல ஆலோசகர் உங்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளையும், அவற்றை எப்படித் தாண்டி வரலாம் என்பதையும் உங்களுக்குக் கூறுவார்.

* வேட்டு வைக்கும் `விருந்து’
நீங்கள் எப்போதும் பார்ட்டி, நண்பர்களுடன் இரவில் நீண்டநேர உரையாடல் என்று `பிசி’யாக இருப்பவரா? அப்படியானால் தாம்பத்திய உறவு பிரச்சினைதான். நேரங்கடந்த, ஒழுங்கற்ற உணவும் வில்லனாகிவிடும்.

தீர்வு : அன்றாட அழுத்தங்களிலிருந்து விடுபட உங்கள் உடம்புக்கு நேரம் தேவைப் படுகிறது. மீண்டும் சக்தி பெறுவதற்கான சிறந்த வழி தூக்கம். அடிக்கடி பார்ட்டிகளில் பொழுதைக் கழிப்பதைத் தவிருங்கள்.

* `குழந்தை’ கவலைகள்
சீக்கிரமாக அம்மா- அப்பாவாக `புரமோஷன்’ பெற வேண்டும், அதற்காக குறிப்பிட்ட முறையில், குறிப்பிட்ட நாட்களில் உறவு கொண்டால்தான் கருத்தரிக்கும் என்ற எண்ணத் தோடு `அதில்’ ஈடுபடுவது. அப்போது அது மருத்துவரீதியான செயல்பாடாகிவிடும். செக்ஸ் இன்பத்தைத் தூரத்துரத்திவிடும்.
தீர்வு : ஆய்வுகளின்படி, 10 சதவீதம் பேருக்குத்தான் முதல் உறவு சரியாக அமைகிற தாம். கருத்தரிப்பதற்காக குறிப்பிட்ட நாட்களைக் குறிவைத்து உறவில் கவனம் செலுத்த வேண்டியதில்லை. நல்ல `ரிலாக்ஸான’, திருப்தியான உறவில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமே.

* உடல், மனநலப் பிரச்சினைகள்
நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த `பிரமோஷன்’ வராமல் போயிருக்கலாம். புதிய நகரத்துக்கு இடம்பெயர்ந்து, அங்கு இன்னும் யாருமë உங்களுக்கு பழக்கம் ஆகாமல் இருக்கலாம். அப்போது எந்தச் செயலிலும் நீங்கள் ஆர்வம் காட்டாது இருக்கலாம்- செக்ஸையும் சேர்த்துத்தான். மனஅழுத்தம் போன்றவற்றால் `எண்டோக்ரைன்’- `தைராய்டு’ சம்பந்த மான பிரச்சினைகள் எழுந்து, செக்ஸ் ஆர்வத்துக்குத் தடைக்கல்லாகி விடலாம்.
தீர்வு : உங்கள் உடம்பில் ஏதோ தவறு என்று நீங்கள் நினைக்கும்போதே மருத்துவ உதவியை நாடுங்கள். ஆரம்ப கட்ட சிகிச்சை முழுமையான குணமளிக்கும். மனச் சோர்வு, கவலை உங்களை வாட்டுëம்போது உங்கள் துணையின் அன்பான அணைப்பை நாடுங்கள். மெல்ல மெல்ல நீங்கள் உங்களைப் பிணைத்திருக்கும் கவலைத் தளைகளிலி ருந்து விடுபடுவது மட்டுமல்ல, படுக்கையில் `நல்ல நேரத்துக்கும்’ அது வழிவகுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.