Home பெண்கள் அழகு குறிப்பு அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?

அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?

25

சினிமா நடிகைகள், விளம்பர மாடலிங் போன்றவர்களுக்கு மட்டும் கூந்தல் எப்படி பளபளப்பாக மின்னுகிறது என்பது புரியாத புதிர். சிலர் பணத்தை விரையம் செய்தும், மணிக்கணக்கில் செலவழித்தும், கூந்தலுக்கு உயிரோட்டமே இல்லை என்று குறைகூறுகின்றனர். இதற்கு காரணம் கூந்தலின் ஆரோக்கியம்தான். உங்களுக்கும் பட்டுப்போன்ற ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சிக்கில்லாத கூந்தல்

கூந்தலை எப்படித்தான் பராமரித்தாலும் சிக்கு ஏற்படுவது இயல்பு. எனவே தலைக்கு குளிக்கும் முன்பாக கூந்தலை நன்றாக சிக்கல் இல்லாமல் சீவவேண்டும். முடியை சீவுவதற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப் போட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங்கச் செய்யும்.

பளபளப்பான கூந்தல்

நன்றாக மசித்த வாழைப்பழத்தை 15 நிமிடங்கள் முடியில் பூசி வைத்து பின்பு ஷாம்பூவால் அதை கழுவி விடவும். இது உலர்ந்த கூந்தல் இருப்பவருக்கு மிகவும் நல்லது.

ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் இவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு, 10நிமிடங்கள் கூந்தலில் தடவி ஊறவைக்கவும். பிறகு தலைமுடியைக் கழுவவும். இது உங்கள் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கும்.

தலைக்கு ஷாம்பு போடும்போது லைட்டாக உபயோகிக்கவும். நன்றாக நுரைபோக தண்ணீர்விட்டு அலசவேண்டும். இதில் முக்கியமானது ஷாம்பு போட்டு தலையை அலசும்போதெல்லாம் கண்டிஷனர் உபயோகிக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

மென்மையாக கையாளுங்கள்

தலைக்கு குளித்த பின்னர் ஈரமான கூந்தலை அடித்து உலர்த்தக்கூடாது. டவலால் கூந்தலை இறுக்கக்கட்டி தண்ணீரை உறிஞ்ச விடுங்கள். 5 நிமிடம் கழித்து மென்மையாக உலர்த்தவும். முக்கியமான அம்சம் முடி காயும் முன்பே விரல்களால் சிக்குகளை நீக்கவும்.

ஹேர் டிரையர் வேண்டாம்

கூந்தலை காயவைக்க அடிக்கடி ஹேர் டிரையர் உபயோகிக்க வேண்டாம். ஒருவேளை உபயோகிக்க நேரும்பட்சத்தில் ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதைத் தவிர்க்கவும். ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். முடியின் நுனிப்பாகத்தை விட, வேர்களில் ஹேர் ட்ரையரை நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக் கூடும்.

தலைக்கு மசாஜ் செய்யுங்கள்

உங்கள் தலையை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால், முடியைதலையில் தேய்ப்பதற்கு பெயர் மஸாஜ் அல்ல! உங்கள் விரல் நுனிகளால்

தலையை மெதுவாக தேய்த்துவிடவும். இது உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் உங்கள் முடி நீண்டதாகவும்,ஆரோக்கியமாகவும் வளரும்.