Home பாலியல் அதிசயம்.. ஆனந்தம்.. ஆபத்து.. ஜீன்ஸ்

அதிசயம்.. ஆனந்தம்.. ஆபத்து.. ஜீன்ஸ்

13

_83778505_thinkstockphotos-502879487பெண்களின் உடலை உரிமையோடு இறுக்கிப்பிடிக்கும் உடை. அது நாகரிகத்தின் அடையாளமாகவும், கவுரவமிக்கதாகவும் ஆகிவிட்டது. அதுமட்டுமில்லை, ‘எங்களுக்கு பஸ்களில் ஏறி, இறங்கவும், வாகனங்களை இயக்கவும் ஜீன்ஸ் சவுகரியமாக இருக்கிறது’ என்று பெண்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஜீன்ஸ் அணிவது பெண்களுக்கு பல்வேறு விதத்தில் உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இந்தியா உஷ்ணமான நாடு. இங்கு நாம் அணியும் உடைகள் எல்லாமே உஷ்ணத்தை குறைக்கும் விதத்தில்தான் இருக்கவேண்டும். அதனால்தான் மென்மையான, தளர்வான உடைகளை இந்திய பெண்கள் அணியவேண்டும் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஜீன்ஸ் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். உடலை இறுக்கிப்பிடித்து காற்றோட்டம் இல்லாத நிலையை உருவாக்குவதால், பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

* கீழ் வயிற்றிலிருந்து தொடை வழியாகச் செல்லும் மிகவும் நுட்பமான நரம்பு அழுத்தப்படுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மூட்டுக்களில் வலி, மரத்துப்போதல் போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

* பெண்களுக்கு வயிறு, கர்ப்பப்பை பிரச்சினைகள் ஏற்படும்.

* டைட் ஜீன்ஸ், ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்து நடந்தால் உடல்முழுக்க பிரச்சினைகள் உருவாகும் நிலை ஏற்படும். முதுகு வலியும், கழுத்து வலியும் நிரந்தரமாகும். நீங்கள் டைட் ஜீன்ஸ் அணிகிறவரா? தவிர்த்துப்பாருங்கள், மூன்று வாரத்தில் உங்கள் உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.