Home பெண்கள் தாய்மை நலம் அதிகரிக்கும் கர்ப்பகால நீரிழிவுநோய்

அதிகரிக்கும் கர்ப்பகால நீரிழிவுநோய்

18

8e297329-e6c7-41fa-a1cf-f3a30db76fd2_S_secvpfகர்ப்பகால நீரிழிவுநோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை என்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்கச் செய்யும். இப்படி கருவில் இருக்கும்போதே குழந்தையின் கணையம் இன்சுலின் சுரப்பது தவறு.

அப்படி சுரப்பதன் மூலம் கருப்பைக்குள்ளேயே குழந்தையின் எடை மிக அதிகமாகி, இயற்கையான முறையில் பிரசவம் நடக்க முடியாமல் போய் பிரசவகாலத்தில் தாய் சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம். அது மட்டுமல்லாமல், குறைப்பிரசவம் நடப்பது, குழந்தையின் உள்ளுறுப்புக்களில் குறைபாடு ஏற்படுவது போன்ற பல பிரச்சினைகள் இதனால் உருவாகக்கூடிய ஆபத்துக்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நீரிழிவுநோய் உருவாவதற்கான சாத்தியங்களும் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேற்குலக நாடுகளைச் சேர்ந்த பெண்களோடு ஒப்பிடும்போது, இந்தியாவைச் சேர்நத பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் பதினோறு சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருவுற்ற நான்காவது மாதம் முதல் தாயின் ரத்த பரிசோதனைகள் மூலம் கர்ப்பகால நீரிழிவுநோயை கண்டுபிடிக்க முடியும்.

கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களில் தொண்ணூறு சதவீத மானவர்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டின் மூலமே அவர்களின் நீரிழிவை கட்டுப் படுத்திவிட முடியும். மற்றவர்களுக்கு இன்சுலின் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம். இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான ரத்த பரிசோதனையை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த முயற்சி கருவுற்ற தாய்மார்கள் மற்றும் அவர்தம் குழந்தைகள் மத்தியிலான நீரிழிவுநோய் பரவலை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.