Home பெண்கள் உடல் கட்டுப்பாடு வெல்லம்: நீங்கள் எடை இழக்க எவ்வாறு உதவுகிறது

வெல்லம்: நீங்கள் எடை இழக்க எவ்வாறு உதவுகிறது

41

வெல்லம் ஒரு இயற்கையான இனிப்பு சுவை கொண்டுள்ளதால் பல வகையான இனிப்புக்களுக்கு பயன்படுத்தலாம். அதன் மூல தோற்றம் தூய்மையாக்கப்படாததாக இருந்தாலும், எந்த ஒரு வெல்லமும் சிகிச்சை தொடர்புடைய நன்மைகளை கொண்டதை எவரும் மறுக்க முடியாது. இது எந்த ஒரு இரசாயனங்களும் கலக்கப்படாத சர்க்கரை ஆகும். எனவே, எப்போதும் இது வெள்ளை சர்க்கரைக்கு ஒரு நல்ல மாற்றாக உள்ளது.

வெல்லம், தங்க பழுப்பு நிறம் கொண்டு தன் நிறத்தில் வேறுபட்டும் தனித்துவம் கொண்டுள்ளது. இது இனிப்புத்தன்மையில் ஐந்து வகையான சுக்ரோஸை கொண்டிருக்கிறது. இதில் புரதங்கள், இழைகள், கனிமங்கள் மற்றும் கலோரி போன்ற நற்குணங்கள் உள்ளது. வெல்லம் கரும்பு சாற்றில் இருந்து எடுக்கப்படும் காரணத்தால், கரும்பினது சுவையை கொண்டுள்ளது. இதை ஒரு இயற்கை வகையில் கிடைக்க கூடிய இனிப்பாகும், கரும்பில் இருந்து எடுக்கப்படும் கரும்பு சாறு வேகவைக்கப்பட்டு, பின் குளிர்விக்கப்பட்டு பின் உருவாக்கபடுகிறது. 50% சுக்ரோஸ், 20% ஈரப்பதம், 20% சர்க்கரைகள் போன்ற சத்துக்கள் இருப்பதினால், வெல்லம் எடை இழப்பதற்கு ஒரு சிறந்த தீர்வாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
வெல்லம் எடை இழப்பதற்கு எவ்வளவு உதவுகிறது?
வெல்லம் மிகுந்த ஊட்டச்சத்தை உள்ளடக்கி உள்ளதால் அது உணவை எளிதாக செரிமானம் செய்கிறது. அதே நேரத்தில், அது இரத்தத்தை சுத்தமாக்கவும் செய்கிறது மற்றும் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி விடுவதோடு, வெல்லம், எடை இழப்பதற்கும் உதவுகிறது:
1. உடலில் நீர் சத்தை தக்கவைத்தல்:
வெல்லம் பொட்டாசியம் உள்ளிட்ட அத்தியாவசிய தாதுக்களை கொண்டுள்ளது. அது உங்கள் உடலில் நீர் தேக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. நீங்கள் தினசரி வெல்லம் உட்கொள்வதன் மூலம் மிகவும் திறம்பட உங்கள் எடையை இழப்பதற்கு உதவுகிறது.
2. மெடாபாலிஸத்தை அதிகரிக்கிறது:
வெல்லத்தில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அதிகமாக கொண்டுள்ளதால் இது எடை இழக்கும் திறனை அதிகரிக்கிறது. இந்த சத்துக்கள் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் மற்றும் மெடாபாலிஸத்தை மேம்படுத்தவும் உதவும். இவ்வாறு, நீங்கள் ஒரு நல்ல உடல் அமைப்பை பெற எண்ணினால், உங்கள் உணவு முறையில் இந்த மருத்துவ குணம் மிக்க வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும்.
வெல்லம் சமையலில் சேர்ப்பதன் மூலம் எடை இழக்கும் முறைகள் :
இப்போது நீங்கள் எடை இழப்பதற்கு உதவும் பண்புகளை தெரிந்துக்கொண்டோம், இப்பொழுது இதை எவ்வாறு உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவது என்ற வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். இங்கே அதன் சுவையான மற்றும் சத்துக்களை அனுபவிக்க இரண்டு பொதுவான வெல்லம் சேர்க்கப்பட்ட சமையல் குறிப்புகள்:
1. வெல்லம் இனிப்பு மிட்டாய் / கடலை மிட்டாய் (சிக்கி):
வெல்லத்தின் அனைத்து பயனை பெறுவதற்கான இந்த செய்முறையை குறிப்பாக குளிர்காலத்தில் செய்வது சால சிறந்தது.
தேவையான பொருட்கள்:
1. தேவையான அளவு வெல்லம்
2. சில தோல்கள் நீக்கப்பட்ட வேர்கடலை
3. எள்
4. நெய் தட்டில் தேய்க்கும் அளவிற்கு
செய்முறை:
1. ஒரு கடாயில் எள் விதைகளை வறுத்து, அதை ஆற வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு நான்ஸ்டிக் கடாயில் வெல்லத்தை மிதமான சூட்டில் 2 நிமிடம் உருக வைக்கவும்.
3. உருகியதும் உடனடியாக அடுப்பை அணைக்க வேண்டும். இல்லையெனில் அது கடினமாகி பற்களால் கடிக்க முடியாத அளவிற்கு மாறிவிடும்.
4. இந்த உருகிய வெல்லதில், வறுத்த எள் மற்றும் வேர்கடலையை சேர்க்க வேண்டும்.
5. ஒரு நெய் தடவப்பட்ட தட்டில் இந்த கலவையை ஊற்ற வேண்டும்.
6. அதை உங்கள் விருப்பப்படி கத்தியால் அழகாக வெட்டி உருவம் கொடுக்கலாம்.
உங்கள் வாய் ஊறக்கூடிய சிக்கி சுவையோடு தயாராக உள்ளது. நீங்கள் அதை மேலும் சுவைக்கூட்ட ஒரு பாதாம் அல்லது முந்திரியை சேர்க்கலாம்.
2. வெல்லம் டீ:
வெல்லம் டீ தயாரிப்பது மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள்:
1. தேயிலை
2. வெல்லம்
செய்முறை:
1. நீங்கள் வழக்கமான முறையில் இந்த டீயை தயார் செய்யலாம்.
2. இந்த சிறப்பு தேனீர் செய்ய, நீங்கள் வெறும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்க வேண்டும். எனினும், சுவைக்கேற்ப போதுமான அளவு சேர்க்க வேண்டும்.
நீங்கள் இந்த டீயை தினசரி குடிக்கும் பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த வெல்லம் டீ உங்கள் உடலில் கலோரி எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் சுக்ரோஸ் இருக்கும் காரணத்தால், இது வெள்ளை சர்க்கரையின் தீங்கில் இருந்து காப்பாற்றும்.
– See more at: http://www.tamilnews.cc/news.php?id=64933#sthash.Zf9WHh7T.dpuf