Home அந்தரங்கம் வாழ்க்கையில் இன்பம் தரும் கட்டில் உறவு மோகம் – இது அந்தரங்கம்

வாழ்க்கையில் இன்பம் தரும் கட்டில் உறவு மோகம் – இது அந்தரங்கம்

74

கட்டில் உறவு:மோகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? ரொமான்ஸ். நம் வாழ்க்கையில் அதற்கு ஆயுள் குறைவு. காதலிக்கும் சொற்ப காலத்திலோ, மணமாகி சில மாதங்கள் வரையோ தான் துணை மீது மோகம் கொண்டவர்களாக இருக்கிறோம். ரொமான்ஸ் இல்லாத உறவு, வறட்சிக்கு சமம். மண உறவில் சீக்கிரம் அலுப்பு வருவதற்கு முக்கியக் காரணம் இணையர்களிடையே நிலவும் ரொமான்ஸ் தட்டுப்பாடுதான்.

24 நாடுகளிலிருந்து 70 ஆயிரம் பேரிடம் ஆன்லைனில் நடத்தப்பட்ட டாக்டர் காட்மேன்’ஸ் ஆய்வின்படி தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் மோகத் தீயை அணையவிடாமல் பார்த்துக் கொள்ளும் தம்பதியர் படுக்கையறையிலும் வெளியிலும் புரிதலோடு இருப்பதாக கூறுகிறது. தாம்பத்யத்தின் இனிமைக்கு காரணமான உடலுறவை வெறும் கடமை என எண்ணுபவர்களுக்கு வாழ்க்கையே சுவாரஸ்யமற்றதாவதோடு பிரச்னைக்குரியதாகவும் மாறுகிறது ரொமான்ஸால் செக்ஸ் வாழ்க்கையை அலங்கரிக்க வேண்டியது தம்பதியரின் கடமை. அந்த கடமையை நிறைவேற்றுவதற்கான வழிகள் இதோ…

செக்ஸ் பேச்சுகள் அவசியம்!

அழகான உடலுறவிற்கு தடையாக நிற்பது, செக்ஸ் குறித்து வெளிப்படையாகப் பேச தயங்குவதே. துணையுடன் செக்ஸ் பேச்சுகளை பேசுவதை பலரும் சங்கடமாக நினைக்கின்றனர். தங்களுடைய உடல்வாகு, செக்ஸ் மேல் உள்ள பயம், கலாசாரம் என, பல விஷயங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. இதையெல்லாம் உடைத்தெறிவது முக்கியமான விஷயம். உங்களுடைய இணையுடன் செக்ஸ் பேச்சுகள், உடலுறவை மேலும் உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றும். செக்ஸ் குறித்து வெளிப்படையாகப் பேசும்போது பல தயக்கங்கள் உடையும்.

வாரத்தில் ஆறு நாட்களும் அலுவலக வேலையில் சுற்றிச் சுழல்கிறீர்கள். இதற்கு நடுவே குடும்பத்தில் அவ்வப்பொழுது வெடிக்கும் சின்னச் சின்ன பிரச்னைகள்…இப்படி மனம் எப்போதுமே சோர்வில் இருக்கும். இவையெல்லாம் உங்கள் இல்லற வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஒவ்வொரு நாளும் உங்கள் துணையை சந்திக்கும் வேளைகளில், முத்தத்தைப் பரிசாக கொடுங்கள். சின்னதான கட்டியணைத்தல், கொஞ்சம் அக்கறை இரண்டும் உங்கள் காதலை எப்போதுமே உயிர்ப்புடன் வைத்திருக்கும். உங்கள் துணைக்குப் பிடித்த எதாவது ஒரு பொருளை, அவ்வப்பொழுது பரிசாகக் கொடுத்து அசத்துங்கள். இவையெல்லாம் உங்களின் படுக்கையறை நேரத்தை மேலும் ரொமான்டிக் ஆக மாற்றும்.

சில கேள்விகளும் அவசியம்!

ஒரே மாதிரியான உடலுறவு, சில நேரங்களில் ரொமான்ஸைத் தடுக்கலாம். இந்த முறை படுக்கையறைக்கு செல்லும் முன்பு சில கேள்விகளை உங்கள் துணைவரிடம் கேளுங்கள். இதற்கு முன் படுக்கையறையில் ஏதேனும் சங்கடங்கள், தொந்தரவுகள் இருந்ததா என்று பரஸ்பரம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவற்றை இந்த முறை தவிர்க்க முயற்சியுங்கள். உங்கள் தாம்பத்யத்தை உயிரோட்டமாகவும், புதுவித அனுபவமாகவும் உங்களின் இந்த முயற்சி மாற்றும்..

சில கேள்விகள்…

1. உன்னை மிகவும் சந்தோஷப்படுத்திய தருணம் எது? என்னுடைய காதலை எந்த இடத்தில் உணர்கிறாய்?

2. என்னுடைய செயல்களில் எந்த விஷயம், உன்னை மிகவும் மகிழ்ச்சியாக உணர வைத்தது?

3. உன்னுடைய மன உணர்ச்சியை உணர எது தேவை என்று நினைக்கிறாய்?

4. என்னிடம் ‘இது வேண்டாம்’ என்று எதைச் சொல்ல நினைக்கிறாய்?

5. படுக்கையறையில் என்ன மாதிரியான எண்ணங்கள் உன் மனதில் தோன்றியது?

ஐடி துறையில் பணிபுரியும் தம்பதியரான காயத்ரி, பிரகாஷ் இருவருக்குமே வாரத்தில் ஐந்து நாள் கடுமையான வேலை. இருவரும் சந்தித்துகொள்ளவோ, பேசிக்கொள்ளவோ நேரமே இல்லை. அப்படியான வேலை அது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் செக்ஸ் வைத்துக்கொள்ள திட்டமிடுகிறார்கள். அதில் முழுமையான இன்பம் அடைவதில், எதோ ஒன்று தடையாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அது என்னவென்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அது மனக்கசப்பு வரை நீண்டு, இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. அந்த தம்பதியினர் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மாதிரியான அனுபவங்கள் வேலைக்குச் செல்லும் தம்பதியிரிடையே அதிகம். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, ஓர் இரவு மட்டும் செக்ஸ் வைத்துக் கொள்வது, உங்கள் வாழ்க்கையை ரொமான்டிக்காக மாற்றிவிடாது என்பதே. அன்பான, உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகளும், சீண்டல்களும், நினைப்புகளும் பரிமாற்றமும் தான், உங்கள் படுக்கையறையை மேலும் உணர்ச்சிகரமாக மாற்றும். உங்கள் துணையின் ஆழ்மன ஆசைகள் என்னவென்று அப்பொழுது தான் உங்களால் உணரமுடியும். உங்கள் துணையை சுதந்திரமாகப் பேச விடுங்கள். வேலையின் நிமித்தம் பிரிந்திருந்தாலும், எப்போதும் உங்கள் இணையருடன் காதலாகவும் எமோஷனலாகவும் இணைந்திருங்கள்.

படுக்கையறைக்குள், சுற்றிலும் காதலில் திளைக்கும் உங்களின் புகைப்படங்களை பொருத்துங்கள். படுக்கையும் தலையணையும், உங்கள் இணையரின் விருப்பமான நிறத்தில் இருந்தால் சிறப்பு. மிருதுவான, படுக்கைக்கு கச்சிதமான மெத்தையாக இருந்தால் இன்னும் சிறப்பாக உணரலாம். மொத்தத்தில் திருவிழாவிற்கு அழைப்பது போல, கொண்டாட்டத்திற்கான இடமாக படுக்கையறை இருக்க வேண்டும். அந்தச் சூழல், உங்கள் மனநிலையை மாற்றும். எவ்வளவு சோர்வென்றாலும் அதை மறந்து ரொமான்ஸில் லயிக்கலாம்.

படுக்கைக்குப் பின்னரும் சில பேச்சுகள் அவசியம்!

உடலுறவு முடிந்த உடனேயே தூங்கச் செல்ல வேண்டாம். படுக்கைக்குப் பின்னர் சில கொஞ்சல்களும், பேச்சுகளும் தேவை. ஏதாவது ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம். பழங்கள் அல்லது ஆரோக்கிய உணவுகள் எதையாவது சாப்பிடுங்கள். அதன் பின்னர் தூங்கச் செல்லுங்கள். அப்போதுதான் உடலுறவின் முழுமையான இன்பம் மனத்தளவிலும், உடலளவிலும் நிறைவடையும்.