Home பெண்கள் உடல் கட்டுப்பாடு வயிற்றில் உள்ள தொப்பையின் கொழுப்பை எரிக்க உதவுஉணவு வகைகள்

வயிற்றில் உள்ள தொப்பையின் கொழுப்பை எரிக்க உதவுஉணவு வகைகள்

21

வயிற்றில் உள்ள தொப்பையின் கொழுப்பு, வயிற்றின் நடுப்பகுதியில் வரும் ஒரு வீக்கமாகும். இது எல்லோருக்கும் வரும் ஒரு பொதுவான பிரச்சனை. நீங்கள் அணியும் ஆடைகளையும் மீறி உங்கள் தொப்பை பகுதி மிகவும் தெளிவாக தெரிவதால் நாம் அனைவரும் இதை வெறுக்கிறேம். உங்கள் வயிறின் கொழுப்பு திரட்சிக்கான காரணங்களை தெரிந்துக் கொண்டு நீங்கள் இதை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் மற்றும் இதை எளிதில் குறைக்கலாம்.
கொழுப்பு ஏன் தொப்பையில் வருகிறது?
– ஹார்மோன் மாற்றங்கள்: பெண்கள் மாதவிடாய்க்கு பிறகு உடலில் ஏற்படும் சில ஹார்மோன் மாற்றங்களால் தங்கள் தொப்பையைச் சுற்றி கொழுப்பைப் பெறுகின்றனர். ஹார்மோன் மாற்றங்களால் வளர்சிதை மாற்றம் அதிகம் அடைந்து தொப்பையைச் சுற்றி கொழுப்பு குவிகிறது.
– மரபணுக்கள்: உடல் பருமன் உங்கள் மரபணுக்களால் ஏற்படுகிறது என்றால், அதற்கு நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
– கலோரி: அதிக கலோரி உட்கொள்ளவதால், அது கொழுப்பாக உருமாறுகிறது. அதிக ஜன்க் உணவு உட்கொள்வதாலும் இதில் உள்ள‌ கடினமான கொழுப்பின் விளைவாககவும் பல கலோரிகள் சேர்கிறது.
– மன அழுத்தம்: மன அழுத்தம் ஏற்படுவது மனித இயல்பு. அதிக‌ கொழுப்பு திரட்சியின் முக்கியக் காரணமாக, மன அழுத்தம் இருக்கிறது.
– தூக்கமின்மை: அஜீரணம் அதை தொடர்ந்து வாய்வுப் பிரச்சனை போன்றவற்றினால் தூக்கமின்மை ஏற்பட்டு கொழுப்பை தொப்பையில் சேர்கிறது.
எப்படி கொழுப்பு உங்கள் தொப்பையில் சேர்கிறது?
கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் பல்வேறு செயல்பாடுகளின் ஆற்றலை வினையூக்கியாக எடுத்துக் கொள்ளுகிறது. அதிகப்படியான உடல் கொழுப்பு செல்கள் கொழுப்பை சேமிக்கின்றது.
கொழுப்பு உணவுகள், கொழுப்பு செல்கள் இடத்தை தகர்த்து பின்னர் தசை லைனிங்கில் சேமிக்கப்படுகிறது.
அவை இடுப்பு, மற்றும் மார்பு பகுதியில் உள்ள முக்கியமான இடங்களில் சேமித்தப் பிறகு மீதியுள்ளதை கொழுப்பாக மாற்றத் தொடங்குகிறது.
பிரச்சனை என்னவென்றால் இந்த‌ பகுதிகளில் இருந்து கூடுதல் கொழுப்பை இழப்பதென்பது, நம்மில் அனைவருக்கும் மிக பெரிய கவலையாக உள்ளது. நாம் ஏற்கனவே இதைப் பற்றி நிறைய பேசிவிட்டோம். இப்போது இதை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டுல் என்று பார்ப்போம்?
உடற்பயிற்சி செய்வதை த‌விர, நீங்கள் தொப்பை கொழுப்பைக் குறைக்க ஒரு சரியான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் உண்ணும் உணவு மற்றும் உடற்பயிற்சியில் நீங்கள் உட்கொள்ளும் அதிக அளவு கலோரிகளை எரிக்க உதவுகிறது. இப்போதுள்ள இளைஞர்கள் எல்லாம் துரித வகை உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். தொப்பைக்காக நீங்கள் வெட்கப்பட வேண்டாம், தொப்பையைக் குறைக்க உண்மையில் தீவிர ஆர்வம் இருந்தால் போதும். நீங்கள் சுவையான மற்றும் தொப்பையின் கொழுப்பை அதிகரிக்கும் பொருட்களை உட்கொள்வதை தவிர்த்து, உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும் உணவுகளை உண்ண வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள்:
இங்கே உங்கள் தொப்பையைச் சுற்றி இருக்கும் கொழுப்பை எரிப்பதர்கான சில அத்தியாவசிய உணவுகள் உள்ளன.
1. பழங்கள்: பழங்களில், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து, மிக குறைந்த அளவே கலோரிகளை உள்ளடக்கி உள்ளது. உங்கள் உணவில் தொப்பை கொழுப்பை எரிக்க ஒரு அத்தியாவசிய உணவாக இது இருக்கிறது!
ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, கிச்சிலி, எலுமிச்சம் பழம் போன்ற சிட்ரஸ் பழங்களை மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது வளர்சிதை மாற்றத்திற்காகவும் மற்றும் அமில ஊக்கியாகியாகவும் செயல்பட்டு ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருளாக இது உதவுகிறது.
இதை தவிர பிற கொழுப்பு எரிக்கும் பழங்கள் ஆப்பிள், தர்பூசணி, திராட்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரியாகும்.
2. காய்கறிகள்: இவற்றில் கனிமங்கள் மற்றும் நீர் சத்து உள்ளடக்கம் அதிகம் நிறைந்துள்ளது, இவற்றின் கலோரி உள்ளடக்கத்தில் பழங்களை விட குறைவாக உள்ளது. மற்றும் இது தொப்பை கொழுப்பை குறைக்கும் உணவுகளாக இருப்பதால் நம் உணவில் உள்ள‌ கூடுதலான‌ கொழுப்பை குறைக்கச் செய்கிறது.
முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, தக்காளி, கீரை, பீன்ஸ்; பட்டாணி அனைத்தும் கனிமங்கள் நிறைந்தும் மற்றும் கொழுப்புகள் இல்லாமலும் இருக்கிறது.
இந்த சிறந்த நன்மைகளை பெற நீங்கள் உங்கள் உணவில் இவற்றை சேர்க்கவும்.
3. பருப்பு வகைகள்: பருப்பில் கலோரிகளை அழிக்கும் அமினோ அமிலங்கள் நிறைந்து காண‌ப்படுகிறது, எளிய முறையில் வேகவைத்த பருப்பு, பொரித்த அல்லது பருப்பு மசாலா இவை அனைத்தும் ஆரோக்கியமானதாக உள்ள‌து. மேலும் சுகாதார நலன்களையும் மிகுதியாகக் கொண்டுள்ளது.
4. ஓட்ஸ்: ஓட்ஸில், கரையாத நார்ச்சத்து மற்றும் உங்கள் பசியை குறைத்து சில கார்போஹைட்ரேட்டையும் கொண்டிருக்கும். நல்ல பயிற்சியின் மூலம் உடலுக்கு வலிமை கொடுத்து உங்கள் உடலின் கொழுப்பின் அளவை குறைக்கிறது. ஓட்ஸ் இந்த பட்டியலில் நான்காவதாக வருகின்றது. காலை ஆடை நீக்கிய பால் கொண்டு ஓட்ஸ் ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டால் அது சிறந்த உணவாக இருக்கும். நீங்கள் ஓட்ஸ் வாங்கும் போது, நீங்கள் வாசனையற்று இருக்கும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பல்வேறு வகை ஓட்ஸில், சர்க்கரை மற்றும் கனிம‌ங்களும் கலந்து உள்ளன. ஓட்ஸிலுள்ள இழைகளால் உங்களுக்கு சரியாக செரிமானாகும்.
5. பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள்: நட்ஸ் ஒரு நீண்ட நேரம், உங்கள் வயிற்றை நிறைந்திருக்கச் செய்யும், அவற்றில் கொழுப்பு நிறைந்து கலோரிகள் குறைந்துக் காணப்படுகிறது. பெண்கள் கொழுப்பை எரிக்க இது சத்துள்ள ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது. நட்ஸின் ஆற்றல் வளர்சிதையை அதிகரிப்பதோடு இதில் ஒமேகா 3 கொழுப்பும் அதிக அளவில் உள்ளது.
6. முட்டை: ஒரு முட்டையில், கலோரிகளும் மற்றும் கொழுப்பும் குறைவாக உள்ளது, மேலும் இது ஒரு புரதம் நிறைந்த உணவாகும். ஒரு வேகவைத்த முட்டை உட்கொண்டால் தினமும் தொப்பையின் கொழுப்பை எரிக்க உதவுகிறது. புரதங்கள், கனிமங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டின் ஒரு ஆதாரமாக இருக்கின்றது, முட்டையில் லியூசின் எனப்படும் ஒரு விதமான அமினோ அமிலத்தினை கொண்டிருக்கின்றது. இது கூடுதல் கொழுப்பு எரிய ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. எனவே தினமும் காலையில் ஒரு முட்டையை இளைஞர்கள் சாப்பிட வேண்டும்.
7. மீன்: சால்மன், கானாங்கெளுத்தி, சூரை போன்ர இந்த வகை மீன்களில் புரதம் நிறைந்து உள்ளன. இதில் கொழுப்பு அமிலங்களான‌ (ஒமேகா 3 அமிலம்) வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தொப்பையின் கொழுப்பை எரிக்கிது, இந்த உணவுகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன.
8. நீர்: உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்புகளை குறைக்க நிறைய தண்ணீர் குடியுங்கள்.
9. சர்க்கரை அதிகமில்லாத உணவுகள்: சர்க்கரை உங்கள் உணவின் பட்டியலில் கடைசியாக இருக்க வேண்டும். கூடுமான சந்தர்ப்பங்களில் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
10. அதிகமான‌ புரதங்கள்: இந்த புரதங்கள் எடை குறைக்க கூடுதலாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவை சிறந்த முறையில் கொழுப்பை எரிக்கவும் மற்றும் தசைகளை செயல்பட வைக்கவும் உதவும்.
வயிற்றில் உள்ள தொப்பையின் கொழுப்பை இழப்பது உண்மையில் ஒரு பெரிய பிரச்சினையல்ல, அது மரபணு சார்ந்ததாக இல்லாமல் இருந்தால் நல்லது. சில நடைமுறையில் உள்ள ப‌யிற்சிகள், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இருந்தால் போதும், நீங்கள் ஒரு சமமான வயிற்றைப் பெறத் தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம்.
இதற்கு டயட் எல்லாம் தேவை இல்லை; ஒரு தட்டையான‌ தொப்பையைப் பெற ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்! மேலும் இந்த டாப் 5 உணவுக்கான வீடியோவை மறக்க வேண்டாம்