Home அந்தரங்கம் முதல்நாளில் முடிந்தவரை ஒத்திப்போடுங்கள்..!!

முதல்நாளில் முடிந்தவரை ஒத்திப்போடுங்கள்..!!

25

முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். இது தாம்பத்ய வாழ்க்கைக்கும் பொருந்தும். காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் அந்த நாளில் தாம்பத்தியத்திற்கு எழுதப்படும் முகவுரை மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும். திருமணநாளில் தம்பதியருக்கு அசதியும், சோர்வும் அதிகம் இருக்கும். அந்த சோர்வோடு அதை தொடங்கினால் சில சங்கடங்கள் எழலாம். எனவே தாம்பத்ய உறவின் முதல் ‘அப்ரோச்’ எனப்படும் உடல் சங்கமத்தின் முதல்படியில் ஏறும் போதே சறுக்கல் எதுவும் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிககவனம் தேவை. கவனத்தடுமாற்றம், ஏமாற்றம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை சுமந்து கொண்டு முதல் இரவு அறைக்குள் நுழைந்தால் வேதனை தான் மிஞ்சும்.
பொதுவாக திருமண நாளில் அதிகாலையில் இருந்தே மணமக்களை சிறிது கூட ஓய்வு இல்லாமல் பாடாய் படுத்தியிருப்பார்கள். ஒரே நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து மழையில் நனைந்து ஒருவித டென்ஷனோடு இருப்பார்கள். அன்றையதினத்தில் இருவருக்குமே ஒய்வு தேவை.

மன ஒற்றுமைக்காக சில விஷயங்களைப் பேசிக் விட்டு புதுமாப்பிள்ளை, பெண்ணும் உடலுக்கு ஒய்வு கொடுப்பது மிகவும் நல்லது. மனைவிக்கு ஆசைகள் அதிகமாக இருந்துவிட்டு, கணவன் ஒதுங்கிக் கொண்டாலோ, கணவன் அவசரப்பட்டு, மனைவி ஒதுங்கினாலோ ஒருவித வேதனை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும். அதாவது எதிர்பார்ப்பு ஏற்பட்டவருக்கு ஏமாற்றம் அதனால் தப்பு இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
முதலிரவு அறைக்குள் நுழையும் போது மனத்தெளிவு, ஒரு விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். செக்ஸ் தானே என்று அலட்சியமாக இருந்துவிட்டு உங்களது ஆசைகளை நிறைவேற்ற முனைந்தால் உங்களது எதிர்பார்ப்புகள் தோற்றுப் போகும். இது எத்தனையோ தம்பதிகள் வாழ்க்கையில் நடந்துள்ளது.

முதலிரவு சம்பவங்களை பலர் தங்களது வாழ்க்கையில் நினைத்து பார்ப்பதுண்டு. பலருக்கு இனிமையான நினைவுகளாக இருக்கும். பலருக்கு வேதனையாக இருக்கும். அன்றயதினம் மனதில் ஏற்பட்ட காயம் ஆறாமல் உறுத்திக் கொண்டே இருக்கும். அதற்கு நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ உண்மையான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அழகான மனைவி அமைந்தாலும் முதல்நாள் இரவில் சில தடுமாற்றங்களை சந்திக்க நேர்ந்தால் ஆண்களின் மனம் நொந்து போவதுண்டு. மனைவியுடைய அணுகுமுறையே சரியில்லை. செக்ஸ் விஷயத்தில் ஒண்ணுமே தெரியவில்லை என்ற ஆதங்கமான குற்றச்சாட்டுக்களை ஆண்கள் சுமத்துவதுண்டு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தங்களது மனதில் எழுந்த ஆசைகளை மாயக்கண்ணாடியில் தெரிந்து கொண்டு நடக்கவேண்டும் என்பது ஆண், பெண் இருபாலரின் ஒருமித்தமான கருத்து. ஆனால், சில ஆசைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதை விட செயலில் காட்ட முனைவது மனித இயல்பு. நண்பர்களின் ஆலோசனையை கேட்டு முதல்நாள் இரவில் மது அருந்திவிட்டு சென்ற இளைஞர்களின் வாழ்வில் அதுவே முடிந்து போன இரவாகிவிடும்.
முதல் இரவு அறையை அலங்கரிக்கும் போது உறுத்தாத பூக்களை போடவேண்டும். பூச்சிகள், முட்கள் இல்லாத பூக்களை படுக்கை அறையில் தூவ வேண்டும். இல்லையெனில் அலர்ஜியும், அவஸ்தையும் ஏற்பட்டு அதுவே சிக்கலாகிவிடும். தம்பதியருக்கு ஏற்றமாதிரியான ரொமான்ஸ் உணர்வுகளை கிளர்ந்தெழச்செய்யும் வகையில் அலங்கரிப்பதே ஆரோக்கியம்.
வலியோ, வேதனையோ பெண்ணிடம் இருந்து எதிர்பட்டால் அதற்காக அதிக அளவில் கட்டாயப்படுத்த வேண்டாம். மனைவியை ரிலாக்ஸ் செய்யவிட்டு பின்னர் தொடருவதில் தப்பில்லை. முடிந்த வரை முன்னதாகவே பேசி ஒருவித ரிலாக்ஸ் நிலைக்கு கொண்டு வந்துவிட்டு பின்னர் தொடங்குங்கள். இடையில் சின்னச் சின்ன சிக்கல்கள் ஏற்பட்டால் அதை தவிர்த்துவிடுங்கள்.
தம்பதியர் முதல்நாளே எல்லாமும் சரியாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போடு செல்வது தவறு. அன்றைய தினம் கூடுமானவரை தாம்பத்ய உறவை ஒத்திப்போடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதுவே ஏற்படப்போகும் சந்தோசத்திற்கான முதல்படி என்கின்றனர் நிபுணர்கள்.