Home பாலியல் மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்?

மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்?

14

021-225x3001தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஹார்மோன் சுரப்பு இருக்கும்.

மாதவிலக்கு நின்றதும், இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், செக்ஸில் ஆர்வம் குறைவதோடு பெண் உறுப்பின் பசைத்தன்மைக் குறைந்து இறுக்கமாகிவிடுகிறது. இதனால்தான் உறவின்போது வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது. மருந்து வகைகள், க்ரீம் போன்றவற்றின் மூலமாக இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியும். மருத்துவரை நேரடியாக அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்து வகைகளை உட்கொண்டால் நல்லது.

குள்ளமாயிருப்பது தாம்பத்தியத்தை பாதிக்குமா?

பெண்ணுக்கு 18, ஆணுக்கும் 20-22 வயதில் எலும்புகளின் வளர்ச்சி முழுமை பெறுகிறது. எனவே உயரம் அந்த வயதுக்குள் நிர்ணயமாகிவிடும். பரம்பரைவாகு என்ற ‘ஜீன்’களின் காரணமாக உயரம் அமைந்தாலும் சில உடற்பயிற்சிகளின் மூலம் ஒன்று அல்லது இரண்டு செண்டிமீட்டர் அதிகரிக்கலாம்.

அதுவும் 18 வயதுக்குள் மட்டுமே பயனளிக்கும். 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு பலனளிக்காது. இதற்கென மருந்து மாத்திரைகளும் இல்லை. உயரக் குறைவை கிண்டல் செய்பவர்களை பொருட்படுத்தாதீர்கள். மகிழ்ச்சியான தாம்பத்யம் கணவன் – மனைவி புரிதலில்தான் இருக்கிறது. உயரத்திலோ அல்லது உருவத்திலோ இல்லை.

ப்ரா அணிந்து மார்பை இறுக்கமாக வைத்திருந்தால்தான் தாய்ப்பால் ஊறும்; இல்லாவிட்டால் வற்றிவிடும் என்பது உண்மையா?

ப்ரா அணியாமல் இருப்பதற்கும் பால் சுரப்பதற்கும் சம்பந்தம் இல்லை. பால் சுரக்கும்போது மார்பகங்கள் கனத்திருக்கும். அப்போது ப்ரா அணியாவிட்டால் மார்பகம் தொங்கிவிடும். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது. அதனால் அப்போது கட்டாயம் ப்ரா அணிய வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் சரிவதில்லை. பாலூட்டும்போது ப்ரா அணியாமல் இருந்திருக்கலாம். சில தாய்மார்கள் வெறும் நைட்டி மட்டும் போட்டு உள்ளே ப்ரா அணியாமல் விடுகின்றனர். இதனால் தான் வெகு விரைவாக மார்பகங்கள் சரிந்து விடுகின்றன. இதற்கு க்ரீம், மாத்திரை, மருந்து எதுவும் பலனளிக்காது. மாறாக அவை சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தக்கூடும். பிளாஸ்டிக் சர்ஜரி மட்டுமே நிரந்தரத் தீர்வு. ஆனால் அதற்கு அதிக செலவாகும். தோற்றத்தை சரிப்படுத்த வேண்டுமானால், கம்பிகள் பொருத்தப்பட்ட ப்ரா கிடைக்கிறது. அதை உபயோகிக்கலாம். காம்புகளைச் சுற்றி ஏற்படும் சுருக்கத்திற்கு தோலில் போதுமான எண்ணெய்ப் பசை இல்லாததே காரணம். விக்விட் பாரஃபி எண்ணெய் நல்ல பலனளிக்கும். இதை காலையும் மாலையும் காம்புகளைச் சுற்றித் தடவினால் நாளடைவில் சுருக்கம் மறையும்.

உடலுறவு முடிந்ததும் பாத்ரூம் செல்லவில்லை என்றால் இன்ஃபெக்ஷன் ஏற்படுமா?

உடலுறவின்போது வெளியேறும் விந்து சிலமணி நேரம் உடலிலேயே இருப்பதால் எந்த இன்ஃபெக்ஷனும் ஏற்படாது. குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கு, உறவு முடிந்த்தும் போய் சுத்தம் செய்ய வேண்டாம். முக்கால் மணிநேரமாவது அதே பொசிஷனில் படுத்திருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இத்தகைய ஆலோசனை பெற்றுக் கொண்டவர்கள், உடலுறவுக்கு முன் சிறுநீர் கழிப்பது நல்லது. இல்லாவிட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, உறவுகொண்ட பின் இருந்து கொண்டேயிருக்கும். வெகுநேரம் பொறுத்துக் கொண்டிருந்தால் “யூரினரி இன்ஃபெக்ஷன்” ஏற்படலாம்.

டைட் ஜீன்ஸ் போடுவது கர்ப்பமாவதற்குத் தடையா?

ஆம், இறுக்கமான உள்ளாடைகள் அணிவது, இறுக்கமான ஜீன்ஸ் அணிவது போன்றவற்றால் வியர்வை வெளியேறும் வாய்ப்பு குறைகிறது. அதோடு உறுப்பில் ஏற்படும் தசை இறுக்கத்தாலும் அந்தப் பகுதியில் உண்டாகும் அதிக உஷ்ணத்தாலும் விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கிறது. இதனால் கரு உருவாகாமல் போகக்கூடும்.

ஆணுக்கு விரைப்புத்தன்மை குறைவாக இருப்பது கரு உருவாவதை பாதிக்குமா?

தொடர்ச்சியான செக்ஸ் தெரபி மூலம் விரைப்பின்மையை முழுமையாக குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சையால் ஹார்மோன் குறைபாடு, விந்தணு குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். தெர்மாமீட்டரில் உடல் வெப்பம் எவ்வளவு என்று கணக்கிட்டு, அது குறிப்பிட்ட அள்வு இருக்கும்போது உடலுறவு கொண்டால் கரு உண்டாகும் என்பது வெறும் வதந்திntpane”>. அதனால் டென்ஷன் ஏற்பட்டு வழக்கமான விரைப்புகூட ஏற்படாமல் துவண்டுவிட வாய்ப்புகள் அதிகம். டென்ஷன் இல்லாமல் ஒரு சில நாட்கள் உறவு கொண்டாலே கரு உருவாக வாய்ப்பு உண்டு.

ஆண்கள் உடலுறவுக்கு முன் க்ரீம் தடவிக் கொள்வதால் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

விந்து முந்துவது, விறைப்பை நீட்டிப்பது போன்ற காரணங்களுக்காக சில ஆண்கள் க்ரீம் பயன்படுத்துகின்றனர். இதனால் பெண்களுக்கு எந்தப் பாதிப்பும் நேராது. தோல் அலர்ஜி இல்லாதிருந்தால் எந்த பாதிப்பும் நேராது. செக்ஸ் தெரப்பிஸ்டை அணுகினால், நவீன சிகிச்சை முறையில் இதுபோன்ற பலவீனங்களை சரி செய்ய முடியும். தொடர்ந்து உடற்பயற்சி செய்து வருபவர்களுக்கும் க்ரீமோ, மாத்திரைகளோ தேவைப்படாது.

சில சிறுவயது பெண்களுக்கு மார்பகங்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருப்பது ஏன்?

வயதுக்கு வந்ததும் ஈஸ்டிரோஜன் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதே வயதுக்கு மீறிய மார்பக வளர்ச்சிக்கு காரணமாகும். இரத்தத்தில் ஈஸ்டிரோஜன் அளவைக் கண்டு அதை குறைப்பதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இது இன்னும் பெரியதாகாமல் தடுக்கிறது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளலாம். ஆனால் இதற்கு நாற்பதாயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் வரை செலவாகும்.

முதல் கருவை கலைத்துவிட்டால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையா?

முதல் கருவை கலைத்தால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையல்ல. கரு உண்டாவதைத் தடுக்க, மாதவிலக்கு சுழற்சியின் நடுவில் உள்ள 10 நாட்கள் பாதுகாப்பானவை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் பலருக்கு மாதவிலக்கு சுழற்சி சீராக இருப்பது இல்லை. எனவே கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது நல்லது

மாதவிலக்கு காலத்திற்கு பின் முட்டை வெளிப்படுகிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

மார்பகங்கள் கனமாக இருக்கும். அடி வயிறு வலிக்கும். லேசான ரத்தக்கசிவு ஏற்படும். உடலின் வெப்ப நிலையை அதிகாலையில் அளக்கும் பரிசோதனையை மேற் கொள்ளும்போது, கருவணு விடுபடும் வாய்ப்பு இருந்தால் வெப்பம் குறைந்து மறுநாளே கூடும்.
இவை போன்ற அறிகுறிகள் இருந்தால் கருவணு விடுபடுகிறது என யூகிக்கலாம். கருப்பை திசு சுரண்டல் பரிசோதனை போன்ற ஆய்வுகள் மூலமும் கண்டறியலாம்