Home அந்தரங்கம் நிர்வாண வேலையாட்கள் – வீடியோ

நிர்வாண வேலையாட்கள் – வீடியோ

163

அன்று இன்று நாளை என்று நாம் ஆராய்ந்தால் எமது மனித இனம் ஆரம்ப காலத்தில் ஆதி மனிதனாக வாழ்ந்த காலத்தில் உடை உறையுள் எதுவும் இன்றி உணவை மட்டும் உண்டு மிருகங்கள் போல வாழ்ந்தான் அதற்கப்புறம் மனித நாகரிகம்வளர்ந்து அடிப்படைகளுள் ஒன்றாக உடை விளங்கி வருகிறது. இந்த உடை ஆரம்பத்தில் உடலை மறைப்பதற்காக பயன்பட்டாலும் நாகரிக வளர்ச்சியின் போக்கு உடைகளின் வடிவங்களை மாற்றம் அடைய வைத்துள்ளது.

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இப்போது மனிதர்கள் ஆடை குறைப்பு செய்து வருகின்றனர். இன்றைய நிலையில் பெண்களும் ஆண்களும் கவர்ச்சி உடை அணிந்து அரைகுறையாக திரிவதை நாம் காணலாம் இப்படி இருக்கும் இந்த மனித இனம் நாளை எப்பிடி இருக்கும் என்று நோக்கினால் மனிதன் மீண்டும் ஆதி மனிதனாக மாறுவான் இடுப்பில் மனத்தைக் காக்க எந்த துணியும் இல்லாது பணமே வாழ்க்கை என்ற நிலைக்கு மாறுவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை ஏனெனில் அதற்கான மு நிகழ்வுகள் சில நடந்து கொண்டிருகின்றன அதில் ஒன்றுதான் நிர்வாண வேலையாட்கள்

கால் டாக்சி தெரியாதவர்கள் கிடையாது. கால் டிரைவர் சேவையும் தெரிந் திருக்கும். போன் செய்தால் டிரைவரை அனுப்பி வைப்பார்கள். இதுபோல நூதனமான சேவை அளிக்கும் கம்பெனி ஒன்றை தென்ஆப்ரிக்காவை சேர்ந்தவர் ஆரம்பித்திருக்கிறார்.
டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தோட்டக்காரர், பிளம்பர் என எல்லாரும் நிர்வாணமாக வேலை பார்த்துவிட்டு போவார்கள்.

தென்ஆப்ரிக்காவில் சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கும் நிறுவனம் ‘தி நேச்சுரல் கிளீனிங் கம்பெனி’. ஜீன் பால் ரெய்டு என்பவர் கம்பெனி அதிபர். அவர் கூறியதாவது: நான் காமர்ஸ் படித்தவன். அக்கவுன்டன்ட் வேலை தேடி அலையாய் அலைந்தேன். எந்த இடமும் செட்டாகவில்லை. நன்கு பிக்கப் ஆகிற, அதே நேரம் வித்தியாசமான தொழில் தொடங்க முடிவெடுத்தேன்.

பொதுவாக எல்லா வீடுகளிலும் கொத்தனார், எலக்ட்ரீஷியன், பிளம்பர்கள் அடிக்கடி தேவைப்படுகிறார்கள். அவர்களை நாள் கூலி அடிப்படையில் அனுப்பி வைக்கும் நிறுவனங்களும் நிறைய இருக்கின்றன. எனவே, ‘நிர்வாண சர்வீஸ்’ என்பதை தேர்வு செய்தேன்.

சமையல்காரர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லீகல் அட்வைசர், தோட்டக்காரர், கிளார்க், அக்கவுன்டன்ட், எலக்ட்ரீஷியன், பிளம்பர், கொத்தனார்.. என எல்லா சேவைகளையும் எங்கள் நிறுவனம் வழங்குகிறது. இந்த எல்லா துறையினருமே உங்கள் வீடு தேடி வந்து நிர்வாண சேவை செய்வார்கள். அவர்கள் அரை நிர்வாணமாக இருக்கலாமா, முழு நிர்வாணமாக இருக்க வேண்டுமா என்பது வாடிக்கையாளரின் விருப்பத்தை பொருத்தது.

இவ்வாறு எல்லா துறையினரையும் உள்ளடக்கி நிர்வாண சேவை வழங்குவதில் உலகிலேயே முதல் நிறுவனம் என்னுடையது என்பது குறிப்பிடத்தக்கது. வீடுகளில் அவர்கள் செய்கிற வேலைக்கு வழக்கம்போல சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும். நிர்வாணத்துக்காக ஸ்பெஷலாக ‘நேக்கட் சர்வீஸ்’ சார்ஜ் வசூலிக்கப்படும். மற்றபடி ஒளிவுமறைவு கட்டணம் எதுவும் கிடையாது.

முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நோக்கிலேயே இப்படி ஒரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறேன். விபசாரம், செக்ஸ் சேவை போன்றவற்றை என் கம்பெனி வழங்குவதில்லை. இவ்வாறு ஜீன் பால் கூறியுள்ளார். ஆண், பெண் நிர்வாண ஊழியர்களை அனுப்பக் கேட்டு வீடு, அலுவலகங்களில் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வருகின்றதாம். சொல்லி புளகாங்கிதம் அடைகிறார் ஜீன்.