Home உறவு-காதல் திருமணத்திற்கு பிறகு ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் சின்ன சின்ன ஆசைகள்!!!

திருமணத்திற்கு பிறகு ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் சின்ன சின்ன ஆசைகள்!!!

23

images (4)புத்தர் ஆசைகளை துறந்ததற்கு காரணம் ஒருவேளை அவரது மனைவியாக கூட இருந்திருக்கலாமோ என்னவோ. ஏனெனில், பெண்களும், ஆசைகளும் பிரிக்க முடியாத பந்தம் ஆகும். ஆசனம் இன்றி யோகாவும், ஆசைகள் இன்றி பெண்களும் சாத்தியமற்றது.

உங்க பொண்டாட்டி எப்பவும் சங்கடமாவே இருக்காங்களா? இதெல்லா நீங்க பண்ணுங்க எல்லா சரி ஆயிடும்!!

பெண்களின் ஆசைகளை பற்றி எழுத வேண்டுமெனில் வைரமுத்து, “காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம், வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்” கூறியதை போல தான், காகிதமும், பேனா மையும் போதா நிலை ஏற்பட்டுவிடும். இது அவர்களது இயல்பு.

இன்பமாக இருக்க தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்!!!

எவ்வளவு ஆசைகள் இருந்தாலும், ஓர் பெண் தனது காதலன்/ கணவன் மீது வைத்திருக்கும் ஆசை என்பது எல்லைகளற்றது. சின்ன, சின்ன விஷயங்கள் அவர்களுக்காக, அவர்களது கணவன் செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள். அப்படி என்னென்ன அவர்கள் ஆசைப்படுகின்றனர் என்று இனிப் பார்க்கலாம்….

ஒத்தாசை

திருமணத்திற்கு பிறகு அனைத்து விஷயங்களிலும் அவர்களது கணவரின் பங்கு இருக்க வேண்டும் என மனைவி விரும்புவாள். துணி மடித்து வைப்பதில்,காய்கறி வாங்க உடன் வருவதில் எல்லாம் என்ன இருக்கிறது என நினைக்காதீர்கள். இதுப் போன்ற சிறு, சிறு வேலைகள் செய்யும் போது தான் அவர்கள் மனம் திறந்து நிறைய பேசுவார்கள்.

அம்மா பிள்ளையாக இருப்பது

திருமணத்திற்கு பிறகும் கூட அணைத்து விஷயங்களுக்கும் அம்மா பிள்ளையாக ஆண்கள் இருப்பது பெண்களுக்கு பிடிக்காது. ஏன் நமது அம்மாக்களும் கூட இப்படி தான் இருந்திருப்பார்கள்.

வார இறுதியில் சமையல்

வார இறுதியில் கணவன் முழுமையாக லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு சமைக்காவிட்டாலும், சமையல் செய்யும் போது உதவ வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். இதுப் போன்ற சிறு சிறு விஷயங்கள் தான் தாம்பத்திய உறவை வலுவாக்கும், இனியதாய் தொடர வழிவகுக்கும்.

இரவு நேர பேச்சு

இரவு நேரங்களில், உணவு சாப்பிட்டு முடித்த பிறகு தனிமையில் அன்றைய நாளினை பற்றி முழுதாய் பேச வேண்டும் என்று பெண்கள்ஆசைப்படுவார்கள். குறிப்பாய், கணவன் முழுதாய் அன்றைய நாளில் அவனது வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்று கூற வேண்டும் என்று விரும்புவார்கள்.

ஷாப்பிங்

ஷாப்பிங் செய்யும் போது, வெறுமென பொம்மை போல நிற்காமல், நீங்களும் ஏதாவது சொல்ல வேண்டும். தப்பி தவறியும் அவர்களது தேர்வை பற்றி குறை சொல்லிவிடக் கூடாது அமைச்சரே!!! அவர்கள் மனம் குளிரும்படி ஓரிரு வார்த்தைகள் கூற வேண்டியது அவசியம்.

மனம் வருந்தும் போது ஆறுதல்

கண்டிப்பாக வாரம் ஒருமுறையாவது இந்த மனம் வருந்தும் செயல் நடக்கும். “வாரா வாரம் இதே பொழப்பா இருக்குடி உன்னோட..” என்று எரிச்சல் அடையாமல். பக்குவமாய், அமைதியாய் அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். (வேற என்ன செய்ய நாய் வேஷம் போட்டா லொள், லொள் தானே…)

எடுத்த இடத்தில பொருளை வைப்பது

இதைக் கடைப்பிடிப்பது தான் ஆண்களின் பெரும் பிரச்சனை, அம்மா கூறி, அக்கா, தங்கை, அண்ணி கூறி நடக்காதது.. மனைவி சொல்லி மட்டும் நடந்துவிடுமா என்ன? “நடந்தா உங்க பொண்டாட்டி ஹேப்பி அண்ணாச்சி..” முயற்சி பண்ணி தான் பாருங்களேன்.